தொழில் அதிபர் முஸ்தபாக்கும் பிரியாமணிக்கும் டும் டும் டும்...!

யக்குனர் பாரதிராஜாவால் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை பிரியாமணி, பாரதிராஜாவின் கண்களால் கைது செய் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான பிரியாமணி, தனுஷ், ப்ருத்திவிராஜ், விஷால், கார்த்தி உள்ளிட்ட முன்னனி நடிகர்ளுடன் நடித்தார்.

கார்த்தியுடன் நடித்த பருத்தி வீரன் படம் தமிழில் இவருக்கு பெரும் புகழை பெற்றுத் தந்தது. மதுரை தமிழில் சொந்தக்குரலில் பேசி நடித்த பிரியாமணிக்கு தேசிய விருது கிடைத்தது. இதனிடையே தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட படங்களிலும் அவர் நடித்தார். தமிழில் சமீபகாலமாக அவருக்கு வாய்ப்பு இல்லை.

இந்நிலையில் மும்பை தொழில் அதிபர் முஸ்தபாராஜ்க்கு பிரியாமணிக்கு இடையே பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மலர்ந்தது. இதனைத்தொடர்ந்து தனது காதலை அறிவித்த பிரியாமணி விரைவில் திருமணம் செய்துகொள்ளவுள்ளதாக கூறினார்.

இந்நிலையில் பிரியாமணியின் திருமண நிச்சயதார்த்தம் வரும் 29ம் தேதி பெங்களூரில் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. நிச்சயதார்த்தத்தின் போது திருமண தேதி முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -