செவ்வாய்க்கிழமை (26) மாலை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 'தாருஸ்ஸலாம்' தலைமையகத்தில் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெறவிருந்த கட்சியின் உச்சபீட கூட்டம் அடுத்த மாதம் 3ஆம் திகதிக்கு பின்போடப்பட்டுள்ளதாக உச்சபீடத்தின் செயலாளர் மன்சூர் ஏ.காதர் அறிவித்துள்ளார்.
இத் தினத்தில் நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபை அமர்வில் பங்கேற்க வேண்டியதன் காரணமாக மேற்படி உச்சபீட கூட்டத்தில் கலந்துகொள்ள இயலாமை குறித்து முதலமைச்சர் உட்பட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் விடுத்த வேண்டுகோளை கருத்தல்கொண்டே பிரஸ்தாப உச்சபீட கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஏ.ஆர்.ஏ.ஹபீஸ்.