எம்.எச்.எம்.அன்வர்-
இம்போட் மிரர் ஊடக வலையமைப்பின் 6 வது அகவையை முன்னிட்டு காத்தான்குடி சம்மேளன அஷ்ஷஹீத் அகமட் லெவ்வை மண்டபத்தில் ஊடக பயிற்சி நிகழ்வும் அகவை விழாவும் அதன் நிறைவேற்றுப்பணிப்பாளர் எஸ்.எல்.முனாஸ் தலைமையில் இடம்பெற்றது.
மேற்படி நிகழ்வுக்கு பிரதம அதிதியாக புணர்வாழ்வு மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஷிப்லி பாறுக் மற்றும் ஆரிப் சம்சுதீன், ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சியில் கலந்து கொண்ட பயிற்சியாளர்களுக்கும் இம்போட் மிரர் ஊடக வலையமைப்பின் உறுப்பினர்களுக்கும் விருதுகள் வழங்கி கௌரவித்தனர்.
வளவாளர்களாக சிரேஷ்ட அறிவிப்பாளரும் ஊடகவியலாளருமான ஏ.ஆர்.எம் ஜிப்ரி சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.எஸ்.எம் நூர்தீன் மௌலவி முபாரக் ஆகியோரால் தற்போதுள்ள சமூக ஊடகங்களால் ஏற்படும் தாக்கங்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்தும் விதம் தொடர்பாகவும் செய்தி எழுதுவது எவ்வாறு தற்போதுள்ள டுவிட்டர்களின் சாதக பாதகங்கள் தொடர்பாகவும் விரிவுரைகள் இடம்பெற்றன.
அத்துடன் விரவுரைகளின் இறுதியில் கேள்விகள் கேட்கப்பட்டு பெறுமதியான பரிசில்களும் வழங்கி பயிற்சியாளர்களை உற்சாகப்படுத்தியதுடன் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்ட அனைவருக்கும் இம்போர்ட் மிர்ரர் டீ சேர்ட் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.