கடனை முதலீடாக மாற்றித்தரவும் - சீன அரசாங்கத்திடம் அமைச்சர் ஹக்கீம் கோரிக்கை

சீனக் குடியரசின் அழைப்பையேற்று, சீனாவுக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் அமைச்சர்கள் குழுவினர் நாடு திரும்பும் முன்னர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் ரவூப் ஹக்கீம்,

சீன அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட பாரியளவான கடன் தொகையின் சில பகுதியை முதலீடாக மாற்றுமாறு சீன அரசாங்கத்திடம் கோரியுள்ளோம் என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். 

இலங்கை அரசாங்கத்துக்கு சீன அரசாங்கம் பாரியளவான கடன் தொகையினை வழங்கியுள்ளது. அவற்றினைக் கடனாகக் கருதி, திருப்பிச் செலுத்த வேண்டுமானால் பாரிய நட்டம் ஏற்படும். ஆகையினால் அக்கடன் தொகையின் சில பகுதியை இலங்கைக்கான முதலீடாக மாற்றுமாறு சீன பிரதமரிடமும் ஜனாதிபதியிடமும் கோரியுள்ளோம். 

எமது கோரிக்கையைப் பரிசீலிப்பதாக சீன அரசாங்கம் உறுதியளித்துள்ளது. 

எனவே, இதுதொடர்பிலுள்ள சட்டச் சிக்கல்கள் பற்றிய கலந்துரையாடல்களை மேற்கொண்டு, மேலதிக நடவடிக்கைகளை எடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் தயாராக இருக்கிறது என அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -