மாணவர் ஒன்றியத்தினால், முல்லைத்தீவில் குழாய் நீர் கட்டமைப்பு திறப்பு விழா..!

ளனிப் பல்கலைக்கழகத்தின் தமிழ் மாணவர் ஒன்றியத்தினால் அண்மையில் கொழும்பு தமிழ் சங்கத்தில் வெளியிடப்பட்ட "சாரல்" நூலின் மூலம் கிடைக்கப்பெற்ற மேலதிக நிதியில், முல்லைத்தீவு கல்வி வலயத்துக்கு உட்பட்ட புதுக்குடியிருப்பு கோட்டத்தில், சுதந்திரபுரம் இருட்டுமடு கிராமத்தில் அமைந்துள்ள மு/இருட்டுமடு தமிழ் வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட குழாய் நீர் கட்டமைப்பு திறப்பு விழா வெகு சிறப்பாக வித்தியாலய முதல்வர் திரு து.யோகராசா தலைமையில் 08/04/2016 (வெள்ளிக்கிழமை) அன்று நடைபெற்றது. 

அத்துடன் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் அனுசரணையுடன், களனி பல்கலைக்கழக தமிழ் பழைய மாணவர் ஒன்றியமும் இணைந்து பாடசாலை மாணவர்கள் அனைவருக்கும் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது. 

களனி பல்கலைக்கழக தமிழ் பழைய மாணவர் ஒன்றியத்தினால் புதிய நூலகம் ஒன்றை அமைப்பதற்காக பெருந்தொகையான நூல்களும் அன்பளிப்பாக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

இவ் நிகழ்வில் வித்தியாலய ஆசிரியர்களுடன், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவரும், களனிப் பல்கலைக்கழக பழைய மாணவனுமான திரு சு.காண்டீபன், களனிப் பல்கலைக்கழக மாணவர்களான திரு கி.சதீஸ், திரு க.அனோஜன், திரு இ.பிரசாந்தன், திரு எஸ்.விதுசாந் ஆகியோருடன் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் செயலாளரும், ஊவா வெல்லச பல்கலைக்கழக மாணவனுமான எஸ். கேசவன், எஸ்.கஜூரன் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வுகளை சிறப்பித்திருந்தனர்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -