அக்கரைப்பற்றில் தேசிய காங்கிரஸின் 12வது பேராளர் மகாநாடு நாளை. ...!

நிஸ்மி-

தேசிய காங்கிரஸின் 12வது பேராளர் மகாநாடு நாளை (23) சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு அக்கரைப்பற்று அதாஉல்லா அரங்கில் நடைபெறுகின்றது.

தேசிய காங்கிரஸின் தேசிய தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா  தலைமையில் நடைபெறுகின்ற  இப் பேராளர் மகாநாட்டில் கட்சியின் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான எம்.எஸ்.உதுமாலெவ்வை, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச அமைப்பாளர்கள் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

இம் மகாநாட்டில் தற்போது கட்சி எதிர் நோக்கியுள்ள சவால்கள், கட்சியின் புனரமைப்பு நடவடிக்கைகள், கட்சியின் எதிர்கால  நடவடிக்கைகள் பற்றியும் புதிய அரசியல் மறுசீரமைப்புத் திட்டம் தொடர்பாக கட்சியினால் வழங்கப்படவுள்ள ஆலோசனைகள், மும்மொழிவுகள் தொடர்பாகவும் கருத்துப் பறிமாரல்கள்  இடம் பெறவுள்ளன.  
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -