சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள், கொழும்பு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்னால் பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த போராட்டம் இன்று காலை வேளையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், இதில் சுமார் 500 மாணவர்கள் வரை கலந்துகொண்டுள்ளனர்.
சப்பிரகமுவ பல்கலைக்கழகத்தில் 276 மாணவர்களுக்கான வெற்றிடங்கள் இருந்தும் கடந்த இரண்டு வருடங்களாக மாணவர்களுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கு அரசாங்கம் எந்த முயற்சிகளும் எடுக்காதமையால் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளார்கள்.
புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் பல்கலைக்கழகத்தில் 100இற்கு 10% மாணவர்கள் கல்வி கற்பதற்கு இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று கூறினாலும் இதுவரை மாணவர்களுக்கான இடஒதுக்கீடுகள் வழங்கப்படவில்லை என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்கள் தெரிவித்தார்கள்.
இந்த அரசாங்கம் பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்வதற்கு பதிலாக 100இற்கு 35% மாக மாணவர்களின் எண்ணிக்கையை குறைப்பதாக சப்பிரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
மேலும் இன்றைய தினம் சப்பிரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.





