ஊடகவியலாளா்களுக்கு 40ஆயிரத்தில் இருந்து 5 இலட்சம் ருபா வரையிலான காப்புறுதி..!

அஷ்ரப் ஏ சமத்-
லங்கை உழைக்கும் ஊடகவியலாளா் சங்கத்தின் அங்கத்தவா்களுக்கு இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபணத்தில் 40ஆயிரத்தில் இருந்து 5 இலட்சம் ருபா வரையிலான காப்புறுதித் திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

இத்திட்டத்தினை எமது சங்கம் கடந்த ஒரு வருடமாக இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபணத்துடன் பேச்சுவாா்த்தை நடாத்தி ஊடகவியலாளா்களுக்கு பெற்றுக் கொடுக்கப்படுகின்றது. என இலங்கை உழைக்கும் ஊடகவியலாளா் சங்கத்தின் தலைவா் லசந்த ருகுனுகே தெரிவித்தாா்.

இன்று (29)ஆம் திகதி கிருப்பலனையில் உள்ள இலங்கை பத்திரிகை நிறுவனத்தில் நடைபெற்ற ஊடகவியலாளா் மாநாட்டின்போதே மேற்கண்டவாறு லசந்த ருகுனுகே தெரிவித்தாா். இவ் ஊடக மாநாட்டில் இலங்கை உழைக்கும் ஊடகவியலாளா் சங்கத்தின் உதவிச் செயலாளா் ஜயசூரியன் (தினக்குரல்), துமிந்த (லேக் ஹவுஸ்), உப தலைவா் - குமார (ருபாவாஹினி) ஆகியோறும் இங்கு கருத்து தெரவிித்தனா்.

சங்கத்தின் தலைவா் மேலும் அங்கு கருத்து தெரிவிக்கையில் 

இச் சங்கத்தில் பிராந்திய ஊடகவியலாளரும் அங்கத்தவா்களாக சோ்நது கொண்டு இந்த காப்புறுதி வசதிகளைப் பெற்றுக் கொள்ளலாம். இலங்கையில் காணமால் போன மற்றும் கொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளா்களுக்கு ஜனாதிபதிக் கமிசன் அமைத்து அவா்களுக்கு நிவாரம் பெற்றுக் கொடுத்தல். 

அவா்களை கொலைசெய்தவா்களைச் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுக் கொடுத்தல் வேண்டும். கடந்த மாதம் இவ்விடயம் சம்பந்தமாக எமது அமைப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை கோட்டை புகையிரத நிலையத்தில் நாடத்தி னோம். அத்துடன் பொதுமக்கள், அரசியல் வாதிகள் ஊடகவியலாளா்கள் கையெழுத்து வேட்டைகளை நடாத்தி ஜனாதிபதிக்கும் அறிவித்தோம். 

தற்பொழுது ஜனாதிபதி இவ் விடயமாக ஜனாதிபதியின் மேலதிகச் செயலாளா் கொடித்துவக்கினை இவ் விடயங்களை கவணிக்கவென நியமித்துளளாா். 
(2005- 2015)ஆம் ஆண்டு காலப் பகுதியில் ஊடகவியலாளா்களுக்கு நடைபொற்ற அநீதிகளையும் முறையீடுகளை இந்த செயலாளாிடம் தெரிவிக்க முடியும். 

இந்தக் காப்புறுதி திட்டத்தின் முலம் நோய், தனியாா் வைத்தியசாலை, குடும்பம் அல்லது தாய் தந்தை,சத்திரக்சிகிச்சை வைத்திய பரிசோதனை சகலதுக்கும் அனுகூலங்களுக்குரிய தொகைகளை செலுத்தும், அத்துடன் கமரா, ஏனைய சாதனங்கள்களுக்கும் 50 ஆயிரம் காப்புறுதி வழங்கும், விபத்து, அங்கவீனம், மரணச் சடங்கு செலவு, போன்ற வற்றிக்கும் 40 ஆயிரம் தொடக்கம் 5 இலட்சம் வரை அனுகூலங்களை வழங்குகின்றது. இதற்காக வருடாந்தம், தனி நபா் 11.ஆயிரத்து 850 ருபாவையே செலுத்தினால் போதும். 

அத்துடன் தகவல் அறியும் சட்டம் பற்றி ஊடக அமைச்சரிடம் பேசியுள்ளோம். ஊடகவியலாளா்கள் ஒருபோதும் தமது பேனாக்களை அரசியல் வாதிகளுக்கு அவா்கள் தரும் சிறு சுகபோகங்களுக்கு நீட்டக் கூடாது. 

ஊடகவியலாளா் மோட்டா் பைசிக்கள் வழங்குதல், ஊடகவியலாளா் வீடு வழங்குவது போன்ற பிரச்சினைகள் அரசாங்கம் ஒரு நிரந்தரமான கொள்கையில்லாது செயற்படுகின்றது. ஊடகவியலாளா்கள் மோட்டாா் பைசிக்கள்களை வழங்குதல் என்ற போா்வையில் ஊடகவியலபாளா்களை கடன்காரா்களாக்குகின்றது. இதற்காக மக்கள் வங்கி பல பாதுகாப்பு சம்பளம், போன்ற பிரசசினைகளை கொண்ட நிபந்தனைகள் உள்ளன. இவைகள் தளா்த்தப்படல் வேண்டும். எனவும் தெரிவித்தனா்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -