எகிப்திலிருந்து விமானத்தை கடத்தி, அதனை சைப்பிரஸ் நாட்டில் தரையிறங்கச் செய்த நபர் தனது கோரிக்கைகளை வெளியிட்டுள்ளார்.
இப்ராயிம் சமஹா என்ற 27 வயதான நபரே விமானத்தை வெடிகுண்டு அங்கியை அணிந்து , மிரட்டல் விடுத்து விமானத்தை கடத்தியவராவார்.
அவருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து பெரும்பான்மையான பயணிகளை விடுவித்துள்ளார்.
எனினும் விமானப் பணியாளர்கள் உட்பட 11 பேரை அவர் தொடந்தும் தடுத்துவைத்துள்ளார்.
தனக்கு அரசியல் தஞ்சம் வேண்டுமென அவர் கோரியுள்ளதாகவும், தனது முன்னாள் காதலிக்கு கொடுக்குமாறு 4 பக்க கடிதமொன்றை அதிகாரிகளிடம் வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
