எதிர்காலத்தில் திடீர் மின் தடைகளுக்கு ஒரு போதும் இடமளிக்கக் கூடாதென இலங்கை மின்சார சபை உயர் மட்ட அதிகாரிகளுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.
இவ்வாறு நாட்டில் தொடர்ந்தும் திடீரென மின்சாரம் தடைப்படுமாக இருந்தால், மின்சார சபையினால் அல்லது மின்சக்தி அமைச்சினால் வழங்கப்படும் சேவை தொடர்பில் பாரிய சிக்கல் தன்மை ஏற்படும் எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறித்த அதிகாரிகளிடம் நேற்று குறிப்பிட்டுள்ளார்.
திடீர் மின் தடையினால் நுகர்வோர் பாதிப்படைவது மட்டுமல்ல, பொது மக்களின் நாளாந்த வாழ்க்கை, தேசிய பொருளாதாரம் என்பனவும் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகின்றன.
நல்லாட்சி அரசாங்கம் மக்களுக்கு அழுத்தங்களைக் கொடுக்காமல், சலுகைகளை வழங்கவே விரும்புகின்றது. இதனால், இந்த மின்சார அசௌகரியங்களை மக்களுக்கு வழங்குவதிலிருந்து தவிர்ந்து கொள்ள வேண்டும் எனவும் பிரதமர் அறிவித்ததாக மின்சார சபையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
