காரைதீவின் இணைய நுழைவாயில் காரைதீவு.ஓர்க் இன் TRANSCEND (தடைகளை தாண்டி) செயற்றிட்டத்தின் கீழ் சமய நிகழ்வாக இந்துக்களின் கலை கலாசாரங்களை பிரதிபலிக்கும் பயிற்சி பட்டறையானது காரைதீவில் உள்ள அனைத்து அறநெறிபாடசாலை மாணவர்களுக்கும் எமது இணையக்குழுவினரால் கமு/இராம கிருஷ்ண மிசன் பெண்கள் பாடசலையில் நடாத்தப்பட்டது.
இந்நிகழ்வில் வளவாளராக திரு.இரா.குணசிங்கம் ( உபதலைவர்,காரைதீவு ஆலய அறங்காவலர் ஒன்றியம்) திரு.மு.ஜெயராஜ் (செயலாளர்,காரைதீவு இந்து சமய விருத்திச்சங்கம்) ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும் இந்நிகழ்வில் காரைதீவு பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தார் மற்றும் காரைதீவு.ஒர்க் இணையக்குழு ஆலோசகர்கள், சிரேஸ்ட உறுப்பினர்கள் மற்றும் காரைதீவு வித்தக முன்னேற்ற கழக உறுப்பிர்களும் கலந்து சிறப்பித்தனர்.காரைதீவு பிரதேசத்தில் இயங்கிவரும் அறிநெறி பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இங்கு பூமாலை கட்டுதல், கோலம் போடுதல் மற்றும் மங்கள அமங்கள நிகழ்வுகளுக்கான நிறைகுடம் வைத்தல், குருத்து பின்னுதல் போன்ற காரைதீவு வழங்கப்பட்டது.