தோஷங்களை கழிப்பதற்காக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இரகசியமான முறையில் பெண் துறவிகளுக்கு புண்ணியதானம் வழங்கிய பூஜை நடத்தியுள்ளார்.
பீடித்துள்ள தோஷங்கள் நீங்க ஆசிர்வாதம் செய்யும் பெண் துறவி ஒருவர் பற்றிய தகவல் கோத்தபாய ராஜபக்சவின் காதுக்கு எட்டியுள்ளது. கிடைத்த ஆலோசனைக்கு அமைய பௌர்ணமி தினம் ஒன்றில் பெண் துறவிகளிடம் ஆசிர்வாதம் பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
விபரங்கள் அனைத்தையும் புரிந்து கொண்டு, ஹோமாகம பித்திகும்புரவெல விகாரையில் இந்த புண்ணிய தானத்தை நடத்த விகாரையின் விகாராதிபதி ஏற்பாடுகளை செய்திருந்தார்.
பத்து பெண் துறவிகளுக்கு விசேட அன்னதானம் வழங்கும் நிகழ்வை யாருக்கும் தெரியாமல் விகாரதிபதி ஒழுங்கு செய்திருந்தார்.
குறித்த தினத்தில் விகாரையில் உள்ள அறையில் புண்ணிய கர்ம பூஜைகள் இரகசியமான முறையில் நடத்தப்பட்டன. பெண் துறவிகள் அன்னதானம் உண்ட பின்னர், அங்கு கோத்தபாய ராஜபக்ச வந்துள்ளார். இதனையடுத்து அனைவரும் குழம்பியுள்ளனர். இதனால், ஏற்பட்ட நிலைமையை விகாரதிபதி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளார்.
பெண் துறவிகளின் ஆசிர்வாத்தை பெற கோத்தபாய ராஜபக்சவே இந்த புண்ணியதானத்தை ஒழுங்கு செய்தாகவும் கோத்தபாய கைது செய்ய போவதாக தெரியவந்துள்ளதால், அதனை தவிர்த்து கொள்வதற்காக பெண் துறவிகளில் ஆசிர்வாதத்தை பெற வந்துள்ளதாகவும் விகாரதிபதி கூறியுள்ளார்.
அப்போது கருத்து வெளியிட்டுள்ள பெண் துறவிகளுக்கு தலைமை தாங்கிய பெண் துறவி, யார் தானம் வழங்கினாலும் அதனை ஏற்பது எனது பழக்கம். ஆசிர்வாதத்தை பெற்றுக்கொண்டு சட்டம் செயற்படுத்தப்படுவதை நிறுத்த முடியுமா என்பது எனக்கு தெரியாது, அவரவர் செய்த பாவங்களுக்கு அவரவர் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.TW
