முஹம்மட் ஹனீபா-
எமது நாடு இன்று பலதரப்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு முகங் கொடுத்து வந்தாலும் எமது நாட்டு மக்கள் எதிநோக்கிய கஷ்டமான சூழ் நிலையிலிருந்து விடுபட்டு நிம்மதியாக வாழக்கூடிய சூழ்நிலை இந்த நல்லாட்சி அரசினால் ஏற்படுத்தப்பட்டுள்ளது என சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸின் தேசிய தலைவரும் நகர திட்டமிடல் நீர்வழங்கல் வடிகாலமைப்புத்துறை அமைச்சருமான றவூப் ஹக்கீம் அண்மையில் (03) தெரிவித்தார்.
எமது நாடு இன்று பலதரப்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு முகங் கொடுத்து வந்தாலும் எமது நாட்டு மக்கள் எதிநோக்கிய கஷ்டமான சூழ் நிலையிலிருந்து விடுபட்டு நிம்மதியாக வாழக்கூடிய சூழ்நிலை இந்த நல்லாட்சி அரசினால் ஏற்படுத்தப்பட்டுள்ளது என சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸின் தேசிய தலைவரும் நகர திட்டமிடல் நீர்வழங்கல் வடிகாலமைப்புத்துறை அமைச்சருமான றவூப் ஹக்கீம் அண்மையில் (03) தெரிவித்தார்.
அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் அவர்களின் பாரிய முயற்சியின் பயனாக கிழக்கு மாகாண சபையின் 40 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் மூலம் சம்மாந்துறை வங்களாவடி நெற்களஞ்சிய சலைக்கு அருகாமையில் அமைக்கப்படவுள்ள ஆடைத் தொழிற் சாலைக்கான அடிக்கல் நடும் நிகழ்வில்; பிரதம அதீதியாக கலந்த கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
கிழக்கு மாகாண முதல் அமைச்சின் செயலாளர்; யூ.எல்.ஏ.அஸீஸ் தலைமையில் நடைபெற்றவைபவத்தில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்
1989ம் ஆண்டு எமது முஸ்லீம் காங்கிரஸின் ஸ்தாபக தேசிய தலைவர் மர்ஹூம் எம் எச் எம் அஷ்ரப் அவர்களின் பங்களிப்புடன் ஆட்சியமைத்துக் கொண்ட ஜனாதிபதி ஆர். பிரேமதாச அவர்களினால் நாடு பூராகவும் 200 ஆடைத் தொழிற்சாலைகளை நிறுவும் தேசிய வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கின்ற போது எமது இந்தப் பிராந்தியங்களில் பயங்கரவாதம் தலைவிரித்தாடியது அதனால் அன்று அப்பிரதேசங்களில் அதனை நடைமுறைப்படுத்த முடியாத ஏற்பட்டது.
1989ம் ஆண்டு எமது முஸ்லீம் காங்கிரஸின் ஸ்தாபக தேசிய தலைவர் மர்ஹூம் எம் எச் எம் அஷ்ரப் அவர்களின் பங்களிப்புடன் ஆட்சியமைத்துக் கொண்ட ஜனாதிபதி ஆர். பிரேமதாச அவர்களினால் நாடு பூராகவும் 200 ஆடைத் தொழிற்சாலைகளை நிறுவும் தேசிய வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கின்ற போது எமது இந்தப் பிராந்தியங்களில் பயங்கரவாதம் தலைவிரித்தாடியது அதனால் அன்று அப்பிரதேசங்களில் அதனை நடைமுறைப்படுத்த முடியாத ஏற்பட்டது.
இன்று எமது நாட்டில் ஏற்படுத்தப்பட்ட சுமுகமான நல்லாட்சி அரசினால் நிம்மதியாக சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளன இன்று எமது நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ள வெளிநாடுகள் ஆர்வம் கொண்டுள்ளது.
கடந்த மாகாண சபை தேர்தல் மூலம் ஏற்படுத்தப்பட்ட அரசியல் மாற்றத்தின்; பிரகாரம் முழு நாட்டுக்கும் முன்னுதாரணமாக கிழக்கு மாகணத்தில் தேசிய அரசாங்கத்தை நிறுவி எந்த விதமான பாகுபாடுகளும் இல்லாத வகையில் பணியாற்றக் கூடிய சந்தர்ப்பம் எமது மாகணத்துக்கு கிடைத்துள்ளது மாகாணத்தின் அபிவிருத்திக்காக முதலீட்டாளர்களை கொண்டுவருவதில் தீவிரமாக செயற்படும் ஒரு முதல்வராக ஹாபீஸ் நஸீர் அஹமட் திகழ்கின்றார்.
அதற்கு நல்ல ஒரு எடுத்துக்காட்டாக கடந்த ஜனவரி 28ம் திகதி வெளிநாட்டிலுள்ள 200 முதலீட்டாளர்களை எதிபார்த்து ஏற்பாடு செய்யப்பட்ட முதலீட்டளார்கள் மாநாட்டில் 350க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டமை முக்கிய விடயமாகும் அவ்வாறு முதலீட்டாளர்களை கொண்டுவந்து இந்த கிழக்கு மாகாணத்தை பாரிய வகையில் சகல துறைகளிலும் அபிவிருத்தியடையச் செய்ய சிறந்த வேலைத்திட்டங்களை முதலமைச்சர் மெற் கோண்டு வருகின்றார்.
கடந்த அரசாங்கம் எமது நாட்டை அதாளபாதாளத்தில் தள்ளிவிட்டு சென்றுள்ளமை நாம் அறிந்திருக்க வேண்டும் இந்த சால்களுக்கு மத்தியில் எமது நாட்டை வழிநடாத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
நாளை விஷேட அமைச்சரவை கூட்டம் நடைபெற ஏற்றபாடாகியுள்ளது அவற்றில் என்னால் பங்குபற்ற முடியாத நிலையில் அங்கு முக்கியமாக எமது நாட்டின் பொருளாதார விடயங்கள் தொடர்பாக ஆரயப்படவுள்ளன விஷேடமாக அங்கு சர்வதேச நாணய நிதியத்தில் இலங்கையின் பொருளாதார சிக்கலில் இருந்து மீட்சி பெறுவது தொடர்பாக கடந்த வரவு செலவுத்திட்டத்தில் மாற்றங்கள் சிலவற்றை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளன
அவ்வாறு மேற்கொள்வதாயின் முக்கியமாக இரண்டு மூன்று விடயங்களைய மேற்கொள்ள வேண்டும் அதாவது வரிஅறவீட்டை அதிகரிப்பது இல்லாவிட்டால் வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிப்பது என்பதாகும் எதிர்வரும் இரண்டு ஆண்டுகள் பாரிய பொருளாதார இறுக்கமுடைய சவாலான ஆண்டாக அமையும் என்பதை இந்த இடத்தில் வெளிப்படையாக கூறி வேண்டியுள்ளது.
இந்த கடன் சுமைகளிலிருந்து ஓரளவுக்க மீட்சி பெறும் வகையில் சகாய அடிப்படையிலான சில விடயங்களை பகிர்ந்து கொள்ள இன்னும் இரு தினங்களில் பிரதமருடன் நானும் சீனாவுக்கு செல்லவுள்ளோம்.
இந்த இறுக்கமாக நிலைமைகளுக்கு மத்தியில் நாம் எதிர்நோக்கிய கஷ;டங்களை மறந்த நிலையில் என்ன நல்லாட்சி அரசில் ஒன்றும் நடைபெறக் கானவில்லையே என்று மக்கள் சிலாகிக்க தொடங்கியுள்ளனர்.
விஷேடமாக உரமாணியம் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது என்றும் அறுவடை செய்த நெல்லுக்கு சரியான விலை கிடைக்கவில்லை என்றும் விவசாயிகள் முனுமுனுக்க தொடங்கியுள்ளனர்.
அவர்களின் எதிர்பார்பில் நல்லாட்சி ஏற்படுத்தப்பட்டால் நாடு துரித அபிவிருத்தி காண வேண்டும், வருமான மேன்பாடு, தொழில் வழங்கல் போன்ற நடைமுறைகள் நடைபெற வேண்டும் என எதிபாக்கப்படுகின்றனர் எனவும் அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார்.
இந்த காலகட்டத்திலேதாக இன்று சம்மாந்துறையில் இந்த பாரிய அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன அவற்றில் உள்ளூர் முதலீட்டாளர்களின் பங்களிப்பு மிகவும் முக்கிய பாத்திரத்தினை வகிக்கின்றது அவற்றில் இங்கு வந்துள்ள ஹமீடியாஸ் நிறுவனத்தின் தவிசாளர் அவர்களின் பங்கு அளப்பரியன எனவும் தெரிவித்தார்.
அதீதிகளாக கிழக்கு மாகாண முதல் அமைச்சர் பொறியியலாளர் ஹாபீஸ் நஸீர் அஹமட், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர், சம்மாந்துறைப் பிரதேச செயலாளர் ஏ.மன்சூர், பிரதேச சபையின் செயலாளர் ஏ.ஏ.சலீம், ஹமீடியாஸ் ஆடை உற்பத்தி நிறுவனத்தின் தவிசாளர் பாயிஸ் உட்பட உலமாக்கள், திணைக்களங்களின் தலைவர்கள், கல்விமான்கள், முதலமைச்சின் அதீகாரிகள், ஊர்மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.


