தெமட்டக்கொடை பகுதியில் வைத்து சிறைச்சாலை பஸ்ஸொன்றின் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சூட்டு சம்பவத்தில், பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் காயமடைந்துள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் திசார உபுல் தினிய தெரிவித்தார்.
இதன்போது காயமடைந்த பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த சந்தேகநபரான தெமட்டகொட சமிந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலை ஆணையாளர் தெரிவித்தார்.
மேலும் புதுக்கடை நீதிமன்றத்துக்கு சென்று, பின்னர் வெலிக்கடை சிறைச்சாலை நோக்கி திரும்பிக் கொண்டிருந்த வேளையிலேயே தெமட்டகொட பகுதியில் வைத்து துப்பாக்கி பிரயோகம் மெற்கொளள்ப்பட்டதாகவும் சிறைச்சாலை ஆணையாளர் குறிப்பிட்டார்.
