நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வழக்குகளில் ஒன்றே சிறுமி சேயாவின் கொலையாகும்.
துஷ்பிரயோகத்தின் பின் கொல்லப்பட்ட சிறுமியின் வழக்கில் குற்றவாளியாக இணங்காணப்பட்ட சமன் ஜயலத்துக்கு நேற்று மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சேயாவின் தாயார் முக்கிய வேண்டுகோள் ஒன்றை விடுத்தார்.
தனது மகளின் வழக்கு முடிந்து விட்டமையால் இதன் பின்னர் அவரின் படத்தை ஊடகங்களில் வெளியிட வேண்டாமென அவர் தெரிவித்திருந்தார்.
இதைப்போல இவ்வழக்கின் நீதிபதி பெற்றோர் தமது பிள்ளைகள் தொடர்பில் அதிக அக்கறையுடன் இருக்குமாறும் தெரிவித்துள்ளார்.
