பெண்ணியத்தின் வரலாற்று துயர் துடைக்கும் ரொஹினா மஃறூப்..!

திருகோணமலை மாவட்டத்தின் தன்னிகரில்லா தலைவனாக அனைவரும் நேசித்த பாராளுமன்ற உறுப்பினர் மர்ஹும் எம்.ஈ.மஃறூப் அவர்களது புதல்வியான பெண்ணிய செயற்பாட்டாளர் ரொஹினா மஃறூப்.

அவரது அண்மைக்கால செயற்பாடுகள் தொடர்பில் முழு திருகோணமலை மாவட்டத்தினதும் பார்வை படிர்ந்திருக்கிறது.

பெண்களின் அவலநிலை

பெண்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் வாழ்வியல் துன்பம்

வறுமை நிலையில் பெண்களின் வகிபாவம்

சிறுவர்களின் கல்வி தொடர்பான நடவடிக்கை

யுத்தத்தின் பின்னரான தமது வாழ்வில் பெண்கள் சிறுவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்

இவ்வாறான அம்சங்களை முன்னிருத்தியதான சமுக செயற்பாடுகளை இவர் முன்னெடுத்து வருவதானது அன்னாரது தந்தையின் சமுகப் பணிகளை உளத்தூய்மையோடு இவர் முன்னெடுப்பதாக மக்கள் கூறுகின்றர்.

பெண்களின் விடயங்களின் அதிகம் அக்கறை கொள்ளும் ரொஹினா மஃறூப் பெண்களுக்காக அடிப்படை பிரச்சினைகளை இனம் கண்டு அவற்றை அடிப்படையாக கொண்ட அமைப்பை உருவாக்கி நாடு தழுவிய பெண்களுக்கான பணியை தொடரவிருப்பதாக அறிய முடிகிறது.

இவரது பணி தொடர்பில் திருகோணமலை மாவட்ட முழு சமுகமும் பேசுவதை மாவட்டம் முழுவதும் அறிய முடிகிறது.

இவரது பணி தொடர வேண்டும் தன்னிகரில்லா தலைவரின் வாரிசினுடைய சேவை அனைத்து பிரதேசங்களையும் உள்ளடக்கியதாக மக்கள் வேண்டி நிற்கின்றர். (அஷ்மி)

காமில் ரஃமான்,
மூதூர். 


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -