காரைதீவு நிருபர் சகா-
காரைதீவு சண்முகா மகா வித்தியலாயத்தின் 62வருடகால வரலாற்றில் க.பொ.த.சா.தபரீட்சையில் 9ஏ பெற்றதன்மூலம் செல்வி.மகேந்திரன் சோவனா கன்னிச்சாதனைபடைத்து வரலாறுபடைத்துள்ளார்.
கல்முனை வலயத்தின் காரைதீவுகோட்டத்திலுள்ள மிகச்சிறந்த 1சி மாதிரிப்பாடசாலையான இப்பாடசாலையில் க.பொ.த. சா.த. வகுப்பு ஆரம்பிக்கப்பட்டு 22வருடங்களாகின்றன.
பாடசாலை அதிபர் இராஜரெத்தினம் ரகுபதி தகவல்தருகையில் ஒட்டுமொத்த பாடசாலை வரலாற்றில் 9பாடங்களிலும் ஏ சிறப்புச்சித்தி பெற்றிருப்பது இதுவே முதல்தடவையாகும்.
செல்வி மகேந்திரன் சோவனா அந்த வரலாற்றுச்சாதனையாளர்.அவரை எமது பாடசாலைச்சமுகம் வாஞ்சையோடு பாராட்டுகிறது.இதற்காக உழைத்த அனைவரையும் இவ்வண் நன்றிகூருகின்றேன் என்றார்.
கல்முனை வலயக் கல்விபப்ணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் இம்மாணவியையும் அதிபர் ஆசிரியர் குழாத்தினரையும் பெற்றோரையும் கல்விச்ச முகத்தையும் பாராட்டியுள்ளார்.
