கைகள் கட்டப்பட்டுள்ளதாக உணர்கின்றேன் - ஹோமாகம நீதவான்



எனது கைகள் கட்டப்பட்டுள்ளதாக உணர்கின்றேன் என ஹோமாகம நீதவான் ரங்க திஸாநாயக்க நேற்று நீதமன்றில் தெரிவித்துள்ளார். பிரகித் எக்னெலிகொட காணாமல் போகச் செய்யப்பட்ட வழக்கின் மற்றுமொரு இராணுவ உத்தியோகத்தர் நீதிமன்றில் முன்னிலைப்படுது;தப்பட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்டதாக, காணாமல் போகச் செய்யப்பட்டதாக உறுதியாக உறுதிப்படுத்தாத நிலையில் குற்றவியல் சட்டத்தின் 296ம் சரத்தின் அடிப்படையில் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தி சந்தேக நபர்கள் நீதிமன்றில் 
முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறான ஓர் நிலையில் சட்டத்தின் வரையறைகளுக்கு குறித்த சந்தேக நபர்களுக்கு பிணை வழங்க முடியாத நிலைமையானது எனது கைகள் கட்டப்பட்டுள்ளதாக உணரச் செய்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.

சந்தேக நபரை எதிர்வரும் 23ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -