பொத்துவிலில் தங்கமகன் அஷ்ரப் பெயரில் விளையாட்டு மைதானம்...!


யு.எல்.எம். றியாஸ்,நிபான்-

ந்தியாவில் இடம்பெற்று முடிவடைந்த தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் கிழக்கு மண் சார்பாக பங்கு பற்றி ஆண்களுக்கான 400 மீற்றர் அஞ்சல் ஓட்டப்போட்டியில் தங்கப் பதக்கத்ததையும் 100 மீற்றர் அஞ்சல் ஓட்டப்போட்டியில் வெண்கலப் பதக்கத்ததைப் பெற்ற பொத்துவிலைச் சேர்ந்த அஷ்ரஃபின் அதீத ஆற்றலுக்கு கிழக்கு மாகான சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான ஆரிப் சம்சுதீன் அவர்கள் நேரில் சென்று வாழ்த்து கூறியும் அன்பளிப்புகள் செய்தும் இன்று (18) இடம்பெற்ற ஊர்வலத்திலும் கலந்து கொண்டார்.

இனி வரும் காலங்களில் பொத்துவில் மண்ணுக்கு அமையவிருக்கும் விளையாட்டு மைதானதிற்க்கு வெற்றி மன்னன் அஸ்ரபின் பெயர் கொண்ட விளையாட்டு மைதானம் விரைவில் அமைக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

இன்று பொத்துவில் அனைத்து விளையாட்டுக் கழகங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் பொத்துவில் மண்ணும், மக்களும் இணைந்து அவருக்கு மகத்தான கெளரவத்தையும் வரவேற்பையும் வழங்கினார்கள்.

பொத்துவில் மணிக்கூட்டு சந்தியில் வைத்து ஊர்வலமாய் அழைத்து வரப்பட்டு பிரதான வீதியூடாக சின்ன உல்லை வரை ஊர்வலம் சென்றது . இதன்போது மக்களால் பொன்னாடை போற்றி அஸ்ரபின் வெற்றிக்கு வாழ்த்துக்களை வழங்கினார்கள்.











இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -