இலங்கையில் ஐஎஸ் தீவிரவாதம் - ஐ.நா. செயலாளர் நாயகம் பகிரங்க அறிக்கை

லங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் ஐஎஸ் தீவிரவாதம் வேகமாக பரவி வருவதாக ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் உத்தியோகபூர்வ அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.

உலகளாவிய ஐஎஸ் தீவிரவாதம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை நேற்று அதன் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இனால் வெளியிடப்பட்டது. 

குறித்த அறிக்கையில் இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் ஐஎஸ் தீவிரவாதிகளின் ஆதரவுத் தளம் வேகமாக வியாபித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் இலங்கையில் கொலன்னாவை, கண்டி, கொழும்பு பிரதேசங்கள் ஐஎஸ் தீவிரவாதிகளின் ஆதரவுத் தளமாக மாற்றம் பெற்றுவருவதாகவும் இது தொடர்பான செய்தியை வெளியிட்டுள்ள சிங்கள ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -