யானையின் வாலில் தொங்கி சுவர்க்கம் செல்ல மக்கள் ஒருபோதும் ஆணை வழங்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று நீர்கொழும்பில் தெரிவித்துள்ளார்.
“கமராலையின் கையால் அது விடுபட்டால் வாலுடனே கீழே விழுந்து விடும். அவர் சென்றால் பரவாயில்லை, அதனால் யானையின் மீது தொங்கி பயணிக்கும் இந்த பயணம் அவ்வளவு நல்லதல்ல. என மஹிந்த ராஜபக்ஷ இன்று நடைபெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உள்ளூராட்சி உறுப்பினர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் கீழ் எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் சில முக்கியமான தீர்மானங்களை மேற்கொள்ளும் நோக்கில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் நீர்கொழும்பில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்நிகழ்வில் சுதந்திரக் கட்சியின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் பெருமளவில் கலந்துகொண்டிருந்தனர்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய மஹிந்த ராஜபக்ஷ;
இம்முறை பாராளுமன்றுக்கு தெரிவாகியுள்ள 96 பேருக்கு யானை மீது சவாரி மக்கள் அனுமதி வழங்கவில்லை.
தான் சுதந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பை தானம் செய்ததாகவும், உண்மையிலேயே அப்படி ஒன்று நடைபெறவில்லை என்று தெரிவித்த மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி தேர்தலில் பின்னர் நிறைவேற்று அதிகாரங்களை பயன்படுத்தி தலைவர் பொறுப்பை பெற்றுகொண்டதாகவும் குறிப்பிட்டார்.
தேர்தலில் பின்னர் கட்சி உறுப்பினர்களிடத்தில் ” அடிப்பேன், சிறையில் போடுவேன், இதை காப்பாற்ற வேண்டும் என்றால் எனக்கு இதை தந்துவிடு” எனக் கூறி தலைவர் பதவியை பெற்றுகொண்டதாகவும் மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார். (dc)
