அடுத்த வருடமளவில் நடைபெறும் என சகலரும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் உள்ளுராட்சி சபை தேர்தலில் தமது பிரதேசங்களை தாமாகவே அபிவிருத்தி செய்ய ஆசைப்படும் இளம்தலைமுறையினரிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டதுக்கு இணங்க 2016.02.17 ம் திகதிவரை
அம்பாறை மாவட்டத்திலிருந்து 1875 விண்ணப்பங்களும், மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 627 விண்ணப்பங்களும் திருகோணமலை மாவட்டத்திலிருந்து 814 விண்ணப்பங்களும், பொலநறுவை மாவட்டத்திலிருந்து 24 விண்ணப்பங்களும் மற்றும் பல மாவட்டங்களிலிருந்தும் சில விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளது.
என்றாலும் எமது நாபீர் பௌண்டசன் இம்முறை கிழக்கில் மாத்திரமே போட்டியிட உள்ளதால் உங்கள் விண்ணப்பங்களின் அடிப்படையில் மிகவிரைவில் எமது நாபீர் பௌண்டசனின் செயலாளர் நாயகம் எம்.எம்.முபாரக் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள தேர்வுக்குழுவினரால் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவீர்கள் என்பதையும், உங்களது முயற்சிக்கு எமது பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.