வீடியோ - கல்குடா மஜ்லிஸ் ஷுராவின் நிகழ்வில் திருத்தச் சட்டம் சம்பந்தமான விசேட உரை..!

அஹமட் இர்சாட் -
யாப்பு சீர்த்திருத்தத்தில் அமுழுக்கு கொண்டுவரப்பட இருக்கின்ற இருபதாவது திருத்தச்சட்டம் சம்பந்தமாக சிறுபான்மை சமூகமான முஸ்லிம்களின் உரிமைகளை பாதிக்காத வகையில் எவ்வாறு யாப்புச் சீர்திருத்தம் அமைய வேண்டும் என்பதனை கல்குடா சமூகத்திற்கு விழிப்பூட்டும் நிகழ்வாகவும், கல்குடா மக்களின் கருத்துக்களை எவ்வாறு யாப்பு சீர்த்திருத்தில் உள்வாங்கக்கூடிய வகையில் ஆக்கபூர்வமான கருத்துக்களை ஏற்படுத்துவது என்ற அடிப்படையில் கல்குடா மஜ்லிஸ் சூரா அமைப்பினர் 04.02.2016 வியாழக் கிழமை ஓட்டமாவடி எம்.பி.சீ.எஸ்.வீதியில் அமைந்து தனியார் கல்வி நிறுவனமான அமெரிக்கன் கொலீஜ் (ACCIS CAMPUS) கேட்போர் கூடத்தில் பிரதேசத்தில் உள்ள சமூக நிறுவனங்கள், சமூக ஆா்வலா்கள், புத்திஜீவிகள் ,உள்ளடக்கியதான கலந்துரையாடலினை ஏற்பாடு செய்திருந்தது.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.ஏ.எம்.றியாஸ் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்விற்கு முக்கிய உரையினை வழங்குவதற்காக வருகைதந்திருந்த சட்டத்தரணி எச்.எம்.எம்.பாரூக் உரையாற்றுகையில் சிறுபான்மை சமூகமான முஸ்லிம் சமூகத்தின் முக்கிய பிரச்சனைகளாக கருதப்படுக்கின்ற உயிர்வாழுக்கின்ற உரிமை, தகவலறிந்து செயற்படுத்தக்கூடிய உரிமை, அடிப்படை உரிமைகள், காணி சம்பந்தமான பங்கீடுகள், தேர்தல் சீர்திருத்தங்கள், அதிகார பரவலாக்கம் என்பன நியாயமான முறையில் சிறுபான்மை சமூகமாக இந்த நாட்டில் வாழுக்கின்ற முஸ்லிம் சமூகத்தினை பாதிக்காத வகையில் கொண்டு வரப்படயிருக்கின்ற இருபதாவது அரசியல் சீர்திருத்தத்தில் நியாயமான முறையில் உள்வாங்கப்பட வேண்டும் என்பதனை பல சட்டரீதியான ஆதாரங்களுடன் விளக்கினார்.

மேலும் இந்நிகழ்வில் கிழக்கு பலகலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் எம்ரிஎம்.றிஸ்வி, மூதூர் உதவி பிரதேச செயலாளர் ஏ.எம்.தாஹிர், ஜுனைட் நளீமி ஆகியோர் தங்களது கருத்துக்களை தெரிவித்ததோடு, கொண்டுவரப்படவிருக்கின்ற உத்தேச தேர்தல் திருத்தச்சட்டம் சம்பந்தமாக தொடர்பான அபிப்பிராயங்களை தெரிவிக்க விரும்புவோர், கீழ்வரும் முகவரிக்கு தமது அபிப்பிராயங்களை அனுப்பிவைக்க முடியும். அல்லது தமது அபிப்ராயங்களை வாய்மொழி மூலமாகவே அல்லது எமது முன்னெடுப்புக்களுக்கு ஆலோசனைகள் தர விரும்பினாலோ கீழ் உள்ள முகவரிக்கு கல்குடா மஜ்லிஸ் ஷுரா சபையினை தொடர்புகொள்ளுமாறு கல்குடா சமூகத்தினை வேண்டிக்கொண்டது கல்குடா மஜ்லிஸ் ஷுரா சபை.

மின்னஞ்சல் majlisussoorahkalkudah@gmail.com அல்லது Junaid07@ymail.com
தபால் : கல்குடா மஜ்லிஸ் ஷுரா 
எஸ்.எம்.ரி ஹாஜியார் வீதி ஓட்டமாவடி 01.

மேலும் சட்டத்தரணி எச்.எம்.எம். பாரூகினால் வழக்கப்பட்ட சட்டரீதியாக முஸ்லிம்களின் உரிமைகள் எவ்வாறு வரவிருக்கின்ற திருத்தச்சட்டத்தில் உள்ளடக்கப்பட வேண்டும் என்பதுபற்றி ஆதாரபூர்வமாக வழங்கிஅய உரையின் காணொளி எமது இணைய நாளிதல் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.


வீடியோ சட்டத்தரணி பாரூகின் விசேட உரை:-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -