ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்,ஹைதர் அலி
கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களின் 2015ம் ஆண்டிற்கான மாகாணசபையின் பண்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து வறுமை கோட்டின் கீழ் வாழும் மக்களின் வாழ்கைத் தரத்தினை மேம்படுத்துவதற்கான வாழ்வாதார உதவிகளை வழங்கும் நிகழ்வு கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதன் இரண்டாம் கட்ட வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வில் சுய தொழிலுக்காக தையல் இயந்திரம் வழங்கும் முகமாக வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் ஒரு குடும்பத்தின் வீட்டிற்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் சென்ற வேலையில் அங்கு இயற்கையாகவே மூலைவளர்ச்சி குறைந்த சிறுவனுடன் மிகவும் சகஜமாக பழகிய காட்சியானது அங்கு கூடியிருந்த எல்லோரினது மனதினை நெகிழ்வடைய செய்ததுடன் இக்காலகட்டத்தில் ஏழை மக்களின் உள்ளங்கள் சந்தோசப்படும் வகையில் முமாதிரியாக நடந்து கொள்ளும் இளம் அரசியல்வாதி என எல்லோராலும் பேசப்பட்டது.