சிராந்தியையும் நாமலையும் கைதிலிருந்து காப்பாற்றிய மைத்திரி...!

முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ் மற்றும் நாமல் ராஜபக்ஷ் ஆகியோரை கைது செய்ய வேண்டும் என்று யோசனை முன்வைக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதனை தவிர்த்தார் எனவும் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அந்த சந்தர்ப்பத்திலேயே மகிந்த ராஜபக்ஷ் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து அவசரமாக விலகினார் எனவும் அவர் கூறியுள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மகிந்த ராஜபக்ஷ் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு துரோகம் செய்யவில்லை எனக் கூறினாலும் அவர் இதற்கு முன்னர் ஒரு முறை கட்சியில் இருந்து விலகிச் சென்றார் என எஸ்.பி. திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -