ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்-
“பொதுப்பணத்தில் ஏதாவது ஒரு வேலைத்திட்டத்தை செய்து விட்டுஅதில் தனிப்பட்டபல சுய இலாபங்களையும் பெற்றுக்கொள்கின்ற அரிசியல் வாதிகளுக்கு கிடைக்கின்ற வரவேற்பும்>மரியாதையும்சமூகத்தில் சிறந்த நற்பிரஜைகளை உருவாக்குகின்ற பணியில் மிகவும் அடிமட்டத்தில் இருந்து பாடுபடுகின்றவர்களுக்கு கிடைப்பதில்லை." என பொறியிலாளர் அப்துர் ரஹ்மான்தெரிவித்தார்.
“பொதுப்பணத்தில் ஏதாவது ஒரு வேலைத்திட்டத்தை செய்து விட்டுஅதில் தனிப்பட்டபல சுய இலாபங்களையும் பெற்றுக்கொள்கின்ற அரிசியல் வாதிகளுக்கு கிடைக்கின்ற வரவேற்பும்>மரியாதையும்சமூகத்தில் சிறந்த நற்பிரஜைகளை உருவாக்குகின்ற பணியில் மிகவும் அடிமட்டத்தில் இருந்து பாடுபடுகின்றவர்களுக்கு கிடைப்பதில்லை." என பொறியிலாளர் அப்துர் ரஹ்மான்தெரிவித்தார்.
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG)யின் ஏற்பாட்டில்காத்தான்குடி பிரதேச முன்பள்ளி ஆசிரியைகளுடனான கலந்துரையாடல் ஒன்று New;W (17.02.2016) NFGG யின் பிராந்தியக் காரியாலயத்தில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலிd;NghJ NFGGயின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர்ரஹ்மான் உரை நிகழ்த்தும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்;
"நமது நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் நேரடி அரசியல்பணிக்கு பத்து வருட வரலாறு காணப்படுகின்ற போதிலும்> எமது Kd;gs;spf; கல்விப்பணிக்கு சுமார் 30 வருட வரலாறு உள்ளது. அதன்பின்னணியில்தான் நாம் இன்றும் நமது மக்களின் கல்வி வளர்ச்சியில் அதிக அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றோம். ஆனால் இன்று நமது சமூகத்தில் சிறந்த நற்பிரஜைகளை உருவாக்குகின்ற பணியில் மிகவும் அடிமட்டத்தில் பாடுபடுகின்ற பலரும் சமூகத்தால் கண்டுகொள்ளப்படுவதில்லை என்பது பெரும் கவலைக்குரிய விடயமாகும். முன்பள்ளி ஆசிரியைகள்> பாடசாலை ஆசிரியர்கள்> குர் ஆன்மத்ரசாக்களில் கடமையாற்றும் முஅல்லிம்கள் என பலரும் இதில்அடங்குகின்றனர்.
பரீட்சைகளில் சிறந்த அடைவு மட்டங்களை பெற்றுக் கொள்கின்றஅல்லது பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்படுகின்ற பலமாணவர்கள் இன்று பல நிறுவனங்களினாலும் பாராட்டப்பட்டுகௌரவிக்கப்படுகின்றனர். இது உண்மையில் செய்யப்பட வேண்டியஒன்றாகும். எனினும் இவர்களின் வெற்றிப் பயணத்திற்குஅர்ப்பணிப்புடனும் பல தியாகங்களுக்கு மத்தியிலும் பாடுபடுகின்றஆசிரியர் சமூகத்தினை அனைவரும் மறந்து விடுகின்றனர்.
அதே போன்று எமது பாடசாலைகள், பொது வைத்தியசாலைகள்போன்ற சமூக சேவை நிறுவனங்களுக்கு தங்களது பெறுமதியானநிலங்களை நன்கொடையாக வழங்கி இன்றுவரை சிறந்த சமூகஉருவாக்கத்திற்காக பங்களிப்புச்செய்த பல பிரமுகர்களையும்இன்றைய தலைமுறையினருக்குத் தெரியாது. அவர்களின் பெயர்தாங்கிய வீதிகளையோ> பெயர்ப்பலகைகளையோ, மண்டபங்களையோ குறித்த நிறுவனங்களில் கூடகாணமுடியாதுள்ளது.
நமது பாடசாலைகள் > வைத்தியசாலைகள் >பள்ளிவாயல்கள் என்பவற்றுக்கு பல கோடி பெறுமதியான தமதுசொந்த காணிகளையும் பணத்தினையும் வாரி வழங்கிய பலர் இருக்fpd;wdh;. அவர்களில் சிலர் எம்மத்தியில் இன்றும் உயிருடன்வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இருப்பினும் அவர்கள் சமூகம் சார்பாக கண்டுகொள்ளப்படாத>மறக்கடிக்கப்பட்ட நிலையிலேயே உள்ளனர்.
ஆனால் இன்றுஉயர்ந்த வரவேற்புகளும் ஆலாபனைகளும் யாருக்குகிடைக்கின்றது...? பொது மக்களின் பணத்தில் ஏதாவது ஒருவேலைத்திட்டத்தை செய்து விட்டு அதில் தனிப்பட்ட பல சுயஇலாபங்களையும் பாரியளவில் பெற்றுக்கொள்கின்ற அரிசியல்வாதிகளுக்கே இந்த வரவேற்பும் மரியாதையும் வழங்கப்பட்டுகின்றன.இந்த நிலமை மாற்றப்பட வேண்டும்.
எமது பிரதேசத்தில் தங்களது அறிவு, ஆற்றல்கள், பொருளாதாரரீதியாக சமூகப்பணிகளை ஆற்றிய ,ஆற்றிக்கொண்டிருக்கின்றவர்கள்நிச்சயம் கௌரவிக்கப்பட வேண்டும்.அவ்வாறான பணியினை நாம்1990 காலப்பகுதியிலிருந்தே செய்து வருகிறோம். இப்பொழுதும்அவ்வாறான ஒரு செயற்திட்டத்தினையே நாம் முன்னெடுத்துவருகின்றோம்.
கடந்த சில மாதங்களாக இவ்வாறு சமூகத்தில் கண்டுகொள்ளப்படாத பல பிரிவினர்களையும் சந்தித்து அவர்களின்பிரச்சனைகளை முடியுமானவரை தீர்க்கும் பணியினை NFGGதொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றது .
அதில் ஒரு பகுதியாகவேமுன்பள்ளி ஆசிரியைகளுடனான இன்றைய கலந்தரையாடலினைநாம் மேற்கொண்டிருக்கிறோம் .இன்று கலந்துரையாடப்பட்டபிரச்சனைகளுக்கான இடைக்காலத்தீர்வுகள் சிலதை அடுத்த சில வாரகாலத்திற்குள் நாம் முன்னெடுப்போம். அவற்றிற்கானநிரந்தரத்தீர்வுகளை பெற்றுத்தரவும் நாம் தொடர்ந்தும்முயற்சிப்போம். "
இந்நிகழ்வில் NFGGயின் மட்டக்களப்பு பிராந்தியசபையின் செயலாளர்MACM ஜவாஹிர் ,மற்றும் பிராந்திய சபை உறுப்பினர்கள்,NFGGயின்மகளிர் அணி உறுப்பினர்கள், பிரதேச முன்பள்ளி ஆசிரியைகள்உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
