ஹாசிப் யாஸீன், எம்.எம்.ஜபீர்-
மட்டக்களப்பு புனித மிக்கல்ஸ் தேசிய பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி இன்று (19) வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு மட்டக்களப்பு வெபர்விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
புனித மிக்கல்ஸ் தேசிய பாடசாலையின் அதிபர் ஆர். வெஸ்லியோ வாஸ் தலைமையில்இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாககலந்து கொண்டார்.
இந்நிகழ்வுக்கு மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன், மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர் எம்.உதயகுமார் ஆகியோர் கௌரவ அதிதியாகவும், மண்முனை கோட்டக்கல்விப் பணிப்பாளர் ஏ.சுகுமாறன், உடற்கல்வி உதவிப் பணிப்பாளர் வீ.லவகுமார் விசேடஅதிதியாகவும் மற்றும் பாடசாலையின் அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள், பாடசாலைகளின்அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது பாடசாலை நிர்வாகத்தினால் பிரதி அமைச்சருக்கு மகத்தான வரவேற்புவழங்கப்பட்டது.
மேலும் விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற இல்லங்களுக்கும், வீரர்களுக்கும் பிரதிஅமைச்சர் ஹரீஸ் வெற்றிக் கிண்ணங்களை வழங்கி வைத்தார்.







