DRC_இன்_செயலாளர்_அஸ்மி_ஏகபூர்
| வட கிழக்கு இணைந்திருந்த போது மாகண சபையை பிரதிநிதித்துப்படுத்தி அண்றைய முதலமைச்சர் வரதராஜ பெருமாளின் தனி ஈழ பிரகடணத்தினூடான நகர்வுளை உணர்ந்து கொண்டமையாலேயே கிழக்கை முஸ்லீம்கள் பெரும்பாண்மையாக வாழும் மாகாணமாக தனது உயிர் மூச்சை இறுகக் கடிந்து உக்கிரமான போர்ச்சூழலில் கூட அதாஉல்லாஹ் வால் மாற்றியமைக்க முடிந்ததது. |
இன்று அரசியலமைப்பு மாற்றம் அதனூடான முஸ்லீம்களின் அனைத்து முக்கிய நகர்வுகளிலும் கிழக்கு பிரிப்பு தொடர்பில் பேசப்படுகிறது.இதற்கு யார் காரணம் தனது உயிரை பணயம் வைத்து அதாஉல்லா செய்த தியாகம் என்றால் ஏற்காமல் விடுவீர்களா? இவ்வாறு இன்று கொழும்பில் இடம் பெற்ற இழப்பீட்டு ஆய்வு மையத்தின் "புதிய அரசியலமைப்பு நகலும் முஸ்லீம்களும்" எனும் கலந்துரையாடலில் அதன் செயலாளரும் முன்னாள் மாநகர சபை உறுப்பிருமான அஸ்மி ஏ கபூர் தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவிக்கையில் அந்த காலப்பபகுதியில் கிழக்கை பிரிக்க வேண்டுமென்று கோரி நிற்பது இலேசான காரியமா? இன்றைய முஸ்லீம் தலைவர்கள் வாய் மூடி சர்வதேசத்துக்கு அடிமைப்பட்டிருந்த காலமது.
ஒரு அமைச்சராக இருந்து அந்த வாகனத்தை பயன்படுத்தியதை விட தனியார் வாகனங்களிலும் ஆட்டோ களிலுமே தனது பயணங்களை மேற் கொண்டிருந்தார்.அவ்வாறு தனது உயிரை கையில் பிடித்து கொண்டு கிழக்கு பிரிப்பு தொர்பான எமது நிலைப்பாட்டை பேசு பொருளாக்கி பிரித்து காட்டியவர்.இவ்வாறான ஒரு நிலைப்பாட்டை வேறு எவராலும் பெற்றுக் கொள்ள முடியாது.அவரால் மாத்திரம்தான் யாருடைய கை பொம்மையாகவும் அவர் செயற்பட்டது கிடையாது. நடக்குமா?
என அச்சமடைந்தோர் இன்று அதன் பலனை அனுபவிக்கிறார்கள்.எனவே அரசியலைப்பு நகலை அரசு முன் வைத்த பின்பே மக்கள் அபிப்பிராயம் மேற் கொள்ளப்பட்டு திருத்தங்கள் மேற் கொள்ள வேண்டுமே தவிர மக்கள் அபிப்பிராயம் முதலில் மேற் கொள்ளப்பட்டு பின்னர் அவர்கள் சமர்ப்பிப்பதை ஏற்றுக் கொள்கிற நிலையயேற்படாது என கூற முடியாது.என்றார்
