கடந்த பாராளுமன்ற தேர்தலில் அம்பாரை மாவட்டத்தின் பொத்துவிலில் தோகை விரித்தாடிய மயில் இன்று பொத்துவிலில் மயிலின் முகவரியே இல்லாமல் போய்விட்டதற்கு காரணம் என்ன??ஃ
வாரத்தில் ஒரு முறையாவது மரத்தில் உள்ள அமைச்சர்மார்கள் பொத்துவிலுக்கு வந்து செல்கின்றனர். அப்படி யானைக் காரர்களுமம் சில நேரங்களில் வந்து செல்கின்றனர். ஏன் உங்கள் கட்சியில் இருந்து யாரும் பொத்துவிலுக்கு வருவதுமில்லை மக்களை சந்திப்பதுமில்லை?
மயிலுக்கு இரண்டு சிறகுகளாய் உங்களையும் அப்துல் மஜித் அவர்களையும் தேர்தல் நேரத்தில் கண்டோம் இன்று இரண்டில் ஒரு சிறகு கொழும்பிலும் இன்னொரு சிறகு வன்னிப்பக்கமுமே பறந்து கொண்டிருக்கிறது காரணம் என்ன? பொத்துவில் மக்களை பார்க்க கூடாதென யாராவது உங்களுக்கு சூணியம் செய்தார்களா? அல்லது ரவூப் ஹக்கீமுக்கு பக்கத்தால் சென்றீர்களா?
சொல்லுங்கள்.
பொத்துவில் மண்ணில் பிறந்த முன்னைய நாளில் ரக்பி விளையாட்டு வீரனால் இன்றைய ஓட்ட வீரன் அதே மண்ணில் பிறந்த பொத்துவில் அப்துல் லத்தீப் அஸ்ரப் வாழ்த்தப்படாததிற்கும் அழைக்கப்படாததிற்கும் காரணம் என்ன கேட்கவில்லையா நீங்கள்???? கொழும்பில் இருந்துமா அவரை அழைக்கச் செல்லவில்லை ஏன் என்று ரக்பி வீரர் அவர்களிடம் கேட்கவில்லையா நீங்கள்???
சரி நீங்களும் ஒரு முஸ்லிம் கட்சியின் தலைவர்தானே அந்த வகையிலாவது எமது நாட்டுக்கும் ஊருக்கும் பதக்கம் வென்றெடுத்து பெறுமை பெற்றுத் தந்த அஸ்ரப்பை உடனே சென்று உங்களால் வாழ்த்தவும் அழைக்கவும் முடியாமல் போனதற்கு காரணம் என்ன? இந்த கருத்துக்களோடு இருக்கும் பொத்துவில் மக்களுக்கு என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?
மயிலின் வேலைத் திட்டம் பொத்துவிலில் என்னதான் நடந்திருக்கிறது???? உள்ளுராட்சியை மயில் கைப்பற்றுமா மரம் கைப்பற்றுமா????? சுயட்சை கைப்பற்றுமா?? யானை கைப்பற்றுமா???? தயாகமகே நீர் பாவனைக்காக சுத்திகரிப்பு சாதனங்ககள் கொடுத்திருக்கிறார்.
பாடசாலை மாணவர்களுக்கு உதவிகள் பல வழங்கி வருகின்றார். ஏழைகளுக்கு உதவி செய்கிறார் அந்த அன்னிய மதத்தை சேர்ந்த தாயகமகே!!!
மார்க்கம் மார்க்கம் என இஸ்லாத்தைப் பற்றி மேடைகள் முழுதும் வாய் பிளந்து பேசிய உங்கள் வார்த்தைகளை ஆ என்று மேடைகள் முன்பு செவிமடுத்துக் கொண்டிருந்த எமது பொத்துவில் முஸ்லிம்களுக் இது வரை என்னதான் செய்திருக்கின்றீர்கள்??? யாரைக் கொண்டு செய்திருக்கின்றீர்கள்???
(மயிலால்) மக்கள் காங்கிரஸினால் என்னதான் வழங்கப் பட்டிருந்தது????
அறுத்துக் கொடுத்த மாட்டிரைச்சி கூட சரியானவர்களுக்கு போய் சேரவில்லை மாட்டின் தொகையும் மாரியமைக்கு காரணம் என்ன????
SSP அப்துல் மஜிட் ஒரு நாள் என்னிடம் சொன்னார் தான் மாவடிப்பள்ளி மக்களுக்கு பள்ளிவாசலுக்கு பத்து இலட்சம் பணம் உங்ககளிடம் இருந்து பெற்று கொடுத்ததாக சொன்னார். ஒரு பக்கம் சந்தோசம் பள்ளிவாசலுக்கு கொடுத்தமையை நினைத்து இன்னொரு பக்கம் நான் சிந்தித்தேன் அடப்பாவிகளா இதற்காகத்தானா நாங்கள் உங்களுக்கு வாக்களித்தோம் பொத்துவிலுக்கு ஒரு எம்பி வேண்டும் என பாடுபட்டோம் என.
அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களே புரிந்து கொள்ளுங்கள் ஒவ்வொரு ஊருக்கும் அபிவிருத்தி செய்வதற்கு எம்பிகளும்,அமைச்சர்களும்,மாகான சபை உறுப்பினர்களும் இருக்கின்றார்கள் இலங்கைக்கு பெயர் போன வருமானத்தை பெற்றுக் கொடுக்கும் இந்த பொத்துவில் ஊர் அன்று தொடக்கம் இன்று வரை பெற்றுத்தான் கொடுக்கிறது எதையும் பெற்றெடுக்க முடியாமலும் ஒரு அரசியல் அனாதையாக இருக்கிறது எல்லாம் அறிந்த நீங்கள் கூடவா பொத்துவில் விடயத்தில் கண் மூடிய கடவுள் போல் இருக்கின்றீர்கள்??
கொஞ்சம் எங்கள் ஊரையும் மக்களையம் சிந்தியுங்கள் நல்லவர்களை சந்தியுங்கள். இன்னும் பல உண்டு தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களே!!! உங்கள் வருகையில் இளைஞர்கள் துள்ளி எழுந்தனர் இன்று கிள்ளி எறிவதற்கு நினைக்கும் காரணம் என்ன?
நீங்கள் பொத்துவிலுக்கு கொடுத்த வாக்கினை மறந்து விட்டீர்களா?? என்னிடம் உண்டு நீங்கள் பேசிய ஒலிப்பதிவு மக்கள் மனப்பதிவில் சுமந்து கொண்ட உங்களின் உணர்ச்சிவாதப்பட்ட பேச்சின் அந்தப் ஒலிப்பதிவு..
அதை ஒரு முறை கேட்போம் என்று கேட்டால் பொத்துவிலுக்கு வாக்குப் பிச்சை கேட்டு வரும் அத்தனை பேரையும் போல் நீங்களும் பேசினீர்கள் கொஞ்சம் வித்தியாசமாகப் பேசுகின்றீர்கள் நினைத்துப் பார்க்கையில் ஆத்திரமும் ஆவேசமும் வருகின்றது பொத்துவிலின் நிலையை பார்க்கும் போது கவலை வருகின்றது.
தொடர்ச்சியாக வாக்கு கொடுத்து அரசியல்வாதிகளிடம் இருந்து ஏமாந்து போகும் எமது மக்களை நினைத்து... என்னுடைய இந்த 31 வயதிற்கும் அதிகமான பல வாசல்களை மிதித்து வாக்குப் பிச்சை கேட்டுப் போய் மன்றாடிய அந்த நாளை இன்று நினைத்துப் பார்க்கையில் ஆத்திரம் வருகின்றது....
உங்கள் கட்சியின் போஸ்டர்கள் ஏற்றிச் சென்ற தான் தொழில் செய்த ஆட்டோவையும் பொலிஸாரால் கைப்பற்றப் பட்டு நீதிமன்றுக்கு சென்றதை நினைத்துப் பார்த்தால் கவலையாக இருக்கிறது.... அது சம்பந்தமாக உங்களுக்கு நான் பெரியதொரு மடல் அனுப்பியிருந்தேன் உங்கள் பதில் இன்றி பதறிப்போனேன்.. இருந்தும் நீங்கள் அமைச்சுப் பதவி ஏற்றுக் கொண்ட அந்த காலப்பகுதியில் நீங்கள் BSUY யாக இருப்பீர்கள் என நினைத்தேன்.
ஆட்டோவை வெளியில் எடுப்பதற்கு கட்சியின் உதவிகள் இன்றி நான் பட்ட கஸ்டங்களை நினைத்துப் பார்க்கும் போது கஸ்டமாக இருந்திருச்சி தனக்காக எந்தவொரு கட்டணமின்றி சட்டத்தரணி முனாசுதீன் அவர்கள் நீதிமன்றில் வாதாடி ஆட்டோவை திருப்பி பெற்றுத் தந்திறுந்தார்...
தேர்தல் முடிந்த கையோடு உங்களை சந்திப்பதற்காக பொத்துவிலைச் சேர்ந்த 12 பேர் வந்திருந்தார்கள் அதில் நானும் ஒருத்தன் இன்னுமொருத்தன் மின்சாரசபையில் வேலை செய்யும் மெளஜூன் பொத்துவிலின் நிலை குறித்து சொல்லியழுது உங்க காலில் விழுந்து கதரியழும் போது நீங்கள் சொன்ன அந்த வார்தைகளுக்கு இன்னும் முடிவில்லை.
உங்களை அனைத்து உங்களின் காதோரமாய் பொத்துவிலின் நிலயை சொல்லி அழுத ஆட்டோ பாயிசின் கண்ணீரை துடைத்த உங்கள் கரம் கொண்டு இந்த மண்ணுக்கு என்னதான் செய்தீர்கள் என்பதை நினைக்கும் போது மனம் விம்மி அழுகின்றது. சட்டத்தரணி முனாசுதீன் அவர்களிடமும் பெறுமதிவாய்ந்த வாக்கினை கொடுத்தீர்கள் கல்விக்கு உதவுவதாக சொல்லியிருந்தீர்கள் இன்னும்தான் உங்கள் வாக்கு நிறைவேறவில்லையே காரணம் என்ன?
இப்படி வார்த்தைகளை நம்பி ஒவ்வொரு முறையும் ஏமாந்து போவதை நினைக்கையில் வேண்டாம் சாக்கடை பிடித்த அந்த அரசியல் .என உள்ளம் எனக்கு கட்டளையிடுகின்றது.எல்லாவற்றுக்கும் முன்பு பொத்துவிலில் மக்கள் காங்கிரஸின் காரியாலயம் எங்கு இறுக்கின்றது????
அமைப்பாளர் யார் ????? இணைப்பாளர் யார்???? யாராலும் மக்கள் காங்கிரஸை தொடர்பு கொள்வதென்றால் யாரிடம் செல்லுவது???? எங்கு செல்லுவது??? யாரை நியமித்து இருக்கின்றீர்கள்???? இதற்கெள்ளாம் உங்கள் பதில் என்ன???
இன்னும் நிறைய கேழ்விகள் கேட்பதற்கு உள்ளோம் ஏனெனில் உங்களுக்கு வாக்களித்துள்ளவர்கள் நாங்கள் கடந்த தேர்தலில் வாக்கைப் பெற்று விட்டு நீங்கள் வாழ்ந்து கொண்டு போறயல். உங்களுக்கு வாக்களித்த குற்றத்துக்காக நாங்கள் ஏனைய கட்சிக்காரர்களின் பார்வைக்கு விரோதியாகவும் உள்ளோம்..
இதற்காகவா வன்னியில் இருந்து பொத்துவில் வரைக்கும் வந்திருந்தீர்கள்.....
எனது கருத்து பிழை எனில் மன்னித்தும் மறந்தும் விடுங்கள்.
எங்கள் வாக்கைப் பெருவதற்கு எத்தனை வாட்டி ஒரே வார்த்தையை மாற்றி மாற்றி மேடை முழுதும் பேசி மக்கள் மனதை வசியப்படுத்தியிருப்பீர்கள்
அதில் வசமானவன் நானும் அதனாலேதான் நான் உங்களிடம் இந்த கேழ்விகளை கேட்டுள்ளேன்.
அன்று நீங்கள் கேட்ட வாக்கை நான் தந்திருந்தேன்!!!
இன்றைய எனது கேழ்வியின் பதிலை நீங்கள் தாருங்கள்.
இன்னும் நிறைய கேழ்விகள் உண்டு உங்களிடமும் பொத்துவில் வேட்பாளரிடமும்....
இன்ஸா அல்லாஹ் தொடருவோம்...... இந்த படத்தை ஞாபகம் இருக்கிறதா மயிலுக்கு வாக்களித்த கையோடு உங்கள் வசலுக்கு வந்த அந்த நாள்!!! மயிலுக்கு வாக்களித்த எங்களுக்கு ஆளுக்கொரு மயிலோ கொடுத்தனுப்பிய அந்த நாளை ஞாபகம் இருக்கிறதா??? மறக்க முடியாது நினைத்துப் பார்க்கும் போது வாக்குத் தேடி அலைந்த கால் இன்னும் வலிக்கிறது.. மறக்க முடியாது.
திட்டிய மக்கள் வார்த்தைகளை கேட்ட இதயம் இன்னும் வலிக்கிறது....மறக்க முடியாது.
இப்படிக்கு
அகமட் லெப்பை முகமட் சியாத்
பொத்துவில்
