அயல்நாடுகள் என்ற ரீதியில் இலங்கைக்கே இந்தியா அதிக முக்கியத்துவம் வழங்கும் - சுஷ்மா சுவராஜ்

னாதிபதி மைத்திரிபாலவின் சிறந்த தலைமைத்துவத்தின் கீழ் இலங்கையில் ஆரம்பிக்கப்படும் புதிய வேலைத்திட்டங்களுக்கு இந்திய அரசாங்கம் பூரண ஆதரவு வழங்கும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

இன்று பகல் ஜனாதிபதியின் இல்லத்தில் இடம்பெற்ற கலந்துறையாடலின் போதே இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். 

மேலும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், இந்திய அரசாங்கமும் இலங்கையின் புதிய தலைவரின் கீழான அரசாங்கத்தின் மீது அதிகம் நம்பிக்கை வைத்தள்ளதாகவும் அவர் இதன் போது தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியாவும், இலங்கையும் அண்மையுள்ள நாடுகளைத் தவிர இரண்டு நாடுகளும் மிகவும் நெரக்கமான நட்புறவைக் கொண்டாடும் நாடுகள் என்றும் தெரிவித்த அவர்,

இதன் காரணமாகத்தான் ஜனாதிபதி மைத்திரிபால பதவியேற்றதும் அவரது முதலாவது வெளிநாட்டுப் பயணமாக இந்தியாவைத் தெரிவு செய்தார்.

எனவே இதற்காக இந்தியா சார்பில் தனது நன்றியையும் தெரிவித்த சுஷ்மா சுவராஜ் அயல்நாடுகள் என்ற ரீதியில் இலங்கைக்கே இந்தியா அதிக முக்கியத்துவம் வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மலையக மக்களின் கல்வி மற்றும் சுகாதார விடயங்களை மேம்படுத்த இலங்கை அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளுக்கு இந்திய அரசாங்கம் பூரண ஒத்துழைப்பை வழங்கும் என தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபாலவின் கருத்தை ஆமோதித்த சுஷ்மா சுவராஜ், இதற்காக ஐடெக் தொழிநுட்ப நிறுவனத்தின் உதவியுடன் நிதி வழங்கவதற்கும் இணக்கம் தெரிவித்துள்ளார். 

அத்துடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மாவுடன், இந்திய வெளிவிவகார செயலாளர் கலாநிதி ஜெயசங்கர் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே. சிங்காவும் இந்த சந்திப்பில் கலந்துக் கொண்டிருந்ததாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -