அரச சேவை உத்தியோகத்தர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்த புதிய சம்பள திருத்தம் தொடர்பான 03/2016 ம் இலக்க சுற்றறிக்கை வெளியானது. புதிய சுற்றறிக்கையின் படி அரச உத்தியோகத்தர்கள் தற்போது 24/2014, 24/2014(I), 05/2015 ம் இலக்க சுற்றறிக்கைகளின்படி பெறுகின்ற 10000/- ரூபா இடைக்கால கொடுப்பனவும்,
31/2011,18/2012 சுற்றறிக்கைகளின்படி பெறுகின்ற ஓய்வூதியத்திற்கு உரித்தற்ற விசேட படிகளும் ஐந்து கட்டங்களாக(2016.01.01, 2017.01.01, 2018.01.01, 2019.01.01, 2020.01.01) அடிப்படைச் சம்பளத்துடன் சேர்க்கப்படவுள்ளது.
* அடிப்படைச் சம்பளத்துடன் இணைக்கப்பட்ட தொகை தவிர்ந்த, தற்போது பெறுகின்ற படிகளின் மீதி சீராக்கல் படியாக வழங்கப்படவுள்ளது.
*இறுதிக் கட்டத்தில் அனைத்து படிகளும் அடிப்படைச் சம்பளத்துடன் சேரும் போது சீராக்கல் படி பூச்சியமாக மாற்றமடையும்.
*புதிய சம்பளத் திட்டப்படி அரச உத்தியோகத்தர்களின் ஆண்டேற்றத்திலும் (Increment) அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
*அடிப்படைச் சம்பளத்தில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதால் அரச உத்தியோகத்தர்கள் பெறுகின்ற மேலதிக நேரக் கொடுப்பனவு, கடன் எல்லை ஆகியவற்றில் அதிகரிப்பு ஏற்படும்.
*அடிப்படைச் சம்பளம் அதிகரித்த போதும் தற்போது பெறுகின்ற இணைந்த படி, புகையிரத ஆணைச் சீட்டுக்களில் மாற்றமேதுமில்லை.
##மேலதிக விபரங்களுக்கு Pubad.gov.lk எனும் இணையதளத்தில் 03/2016 சுற்றறிக்கையை பார்வையிடவும்.
