படத்தில் இருக்கும் இந்த பெண் இலங்கையை சேர்ந்த பரீதா எனவும் தற்சமயம் தான் சவுதி சிறையில் அடைத்துவைக்கப்பட்டுள்ளதாகவும் தான் சவுதியை சேர்ந்தவர்களால் கர்பமாக்கப்பட்டு அங்கு பொலீசாரிடம் முறையிட சென்ற போது பொலீசார் தன்னை மூன்று வருடங்களாக சிறையில் பிடித்துவைத்திருப்பதாகவுன் தன்னை காப்பாற்றூமாறும் வீடியோ மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குறிப்பிட்ட வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகின்றமை குறிப்பிடத் தக்கது இவ் ஆதார வீடியோவை வட்ஸ் எப் மூலம் சவுதிக்கான இலங்கை உயர் ஸ்தானிகருக்கு அனுப்பிவைக்கப் பட்டுள்ளது.
இது தொடர்பாக மிக விரைவில் அவர்து பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது….
அதேவேளை, இலங்கை தமிழ் மற்றும் முஸ்லீம் மக்கள் அனைவரும் பரீதாவின் உறவினர்களுக்கு இந்த தகவலை கொண்டுசெல்ல உதவுங்கள்.
