கல்முனை-திருகோணமலை பஸ் மிதி பலகையில் பயணித்த ஒருவர், விழுந்து வைத்தியசாலையில்...!

எப்.முபாரக்-
ல்முனையிலிருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த தனியார் பஸ்ஸின் மிதி பலகையிலிருந்து தவறி விழுந்து காயமடைந்த ஒருவர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் நேற்று புதன்கிழமை (17) அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கதிரவெளி, பால்சேனைப் பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான இராசதுரை தேவராசா (வயது 30) என்பவரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.

வேகமாக வந்த பஸ் ஈச்சிலம்பற்றுச் சந்தியில் நிறுத்தப்பட்டு பயணிகளை ஏற்றிக்கொண்டு திருகோணமலை நோக்கிப் புறப்பட முற்பட்டபோதே இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தலையில் காயமடைந்த இவர் அவசர விபத்துச் சேவைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து குறித்த பஸ்ஸின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

விபத்துத் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -