250 பில்லியன் டொலர்களுக்கு மஹிந்தவிடம் கணக்கு கேட்கும் சர்வதேசம்...!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிகாலத்தில் ஆரம்பிக்கப்பட்ட 250 பில்லியன் டொலர்கள் பெறுமதியான வேலைத்திட்டங்கள் தொடர்பிலான கணக்கீடுகளை மேற்கொள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் ஸ்ரீலங்காவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் சட்ட ஆய்வு மற்றும் கணக்கீட்டு அதிகாரிகள் கொண்ட விசேட குழு அடுத்த வாரமளவில் ஸ்ரீலங்காவிற்கான விஜயத்தை மேற்கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலிற்கு முன்னதாக இந்த 250 பில்லியன் டொலர்கள் பெறுமதியான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் இதற்கான அனுமதி திறைசேரியிடம் இருந்தும் உரிய கட்டமைப்பிலிருந்தும் பெறப்படவில்லை என்ற குற்றச்சாட்டு காணப்படுகின்றது.

இந்த நிலையில் ஸ்ரீலங்காவிற்கு விஜயம் செய்யும் சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகள் இது குறித்து ஆராயப்படவிருப்பதோடு, ஆய்வுகளின் முடிவில் அரசாங்கத்திற்கும் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சியின் கீழ் இடம்பெற்ற நிதிமோசடிகள் தொடர்பிலான விசாரணைகளுக்கு உதவி வழங்க அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் முன்வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -