ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்-
வருக்கின்ற 2017ம் வருடம் தனது நூற்றாண்டு விழாவினை கொண்டாட எதிர்பாத்திருக்கும் மட்டக்களப்பு ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் 46வது இல்ல விளையாட்டு போட்டியின் இறுதி நாள் நிகழ்வு பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில் பாடசாலையின் அதிபர் ஜுனைட் தலைமையில் 12.02.2016 வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு மிகவும் கோலாகலமாக ஆரம்பமாகி நிறைவு பெற்றது. சபா,ஹிறா, அறபா எனும் மூன்று இல்லங்களைக் கொண்ட இவ் இல்ல விளையாட்டு போட்டியின் இறுதி நாள் நிகழ்விற்கு மட்டக்களப்பு மத்தி கல்விப்பணிப்பாளர் சேஹு அலி பிரதம அதீதியாக கலந்து கொண்டதுடன் மேலும் கல்வி அதிகாரிகள் ஏனைய பாடசாலைகளின் அதிபர்கள், பெற்றார்கள், பிரதேசத்தின் பொதுமக்கள் சகிதம் இறுதி நாள் நிகழ்வினை காண வருகை தந்திருந்திருந்தமையினை அவதாணிக்க கூடியதாக இருந்தது.
இறுதி நாள் இல்ல விளையாட்டு போட்டி நிகழ்வின் சுருக்கமான காணொளியானது எமது இணைய நாளிதல் வாசகர்களின் பார்வைக்கு இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.







