குவைத்தில் 'அகாமா '(Residency) இல்லாமல் சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்கள் சுயமாக முன் வந்து தங்களது நிலைகளை சட்டபூர்வமாக மாற்றிக் கொள்ளவும் அல்லது தங்கள் மேல் இருக்கும் அபராத தொகையை செலுத்தி விட்டு நாட்டிலிருந்து வெளியேறவும் அவகாசம் அளிக்கப்படடுகிறது. இப்படி செய்வதால் குவைத் நாட்டுக்கு திரும்ப வர முடியும் என்றும் உள்துறை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.
எனினும், பாதுகாப்பு படையினரால் பிடிக்கப்பட்டு முழுமையான அபராதத் தொகை செலுத்தப்பட்ட பின் நாடுகடத்தப்படுவார்கள் குவைத் நாட்டுக்கு திரும்ப வர முடியாது என்றும் எனவே இவ்வாறு சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்கள் தனது சட்ட நிலைகளை சரிசெய்வதற்கு விரைவுபடுத்த வேண்டும் என்றும் எச்சரித்தார்,
குவைத்தில் இருக்கும் வெளி நாட்டவர்கள் அனைத்து நேரங்களிலும் தங்களது சட்ட ஆவணங்களை எடுத்துச் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
