தமிழ்த்தேழன் -
விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புகளைப் பேணியவர்கள் இலங்கைக்கு செல்வதை தவிர்க்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புகளைப் பேணியவர்கள் இலங்கைக்கு செல்வதை தவிர்க்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கையை சர்வதேச மனித உரிமைகள் அமைப்பொன்று விடுத்துள்ளது.
இலங்கையின் சமகால அரசாங்கத்திலும் வெள்ளைவான் கடத்தல்கள், சித்திரவதைகள், பாலியல் சித்திரவதைகள் தொடர்வதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனின் மூவர் அடங்கிய நிபுணர் குழுவின் உறுப்பினராக கடமையாற்றிய தென்னாபிரிக்க மனித உரிமைச் சட்ட நிபுணர் யஸ்மின் சூக்கா தலைமையிலான சர்வதேச நீதிக்கும், உண்மைக்குமான திட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
புலிகள் அமைப்புடன் நேரடியாகவே அல்லது மறைமுகமாகவோ தொடர்புபட்டவர்கள் இலங்கைக்குத் திரும்பிச் சென்றால் அவர்கள் இவ்வாறான சித்திரவதைகளுக்கு ஆளாகலாம் என்று அந்த அமைப்பின் ஆய்வாளரான சிரேஷ்ட ஊடகவியலாளர் பிரான்ஸிஸ் ஹெரிசன் தெரிவித்துள்ளார்.
2015ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற இவ்வாறான சம்பவங்களினால் பாதிக்கப்பட்டவர்களின் புகைப்படங்கள் சிலவும் ஆதாரமாக வெளியிடப்பட்டுள்ளது.
