24 மணித்தியாலங்களில் ஜனாதிபதியிடம் 3000 முறைப்பாடுகள்...!

முதல் 24 மணித்தியாலங்களில் ஜனாதிபதியிடம் 3000 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மக்களின் பிரச்சினைகளை நேரடியாக ஜனாதிபதிக்கு முறைப்பாடு செய்யும் திட்டமான “ஜனாதிபதியிடம் சொல்லுங்கள”; திட்டம் நேற்று ஆரம்பிக்கப்பட்டது.

1919 தொலைபேசி இலக்கம் மற்றும் இணைய முகவரி ஊடாக 3200 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

எந்தவொரு பிரஜையும் நேரடியாக ஜனாதிபதியிடம் தனது பிரச்சினைகள்ää ஆலோசனைகளை தெரிவிக்கும் வகையில் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

தபால் மூலம், மின்னஞ்சல் மூலம், தொலைபேசி மூலம், மொபைல் அப்ளிகேசன் மூலம் இவ்வாறு ஜனாதிபதியிடம் மக்கள் நேரடியாக தமது பிரச்சினைகளை தெரிவிக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு கிடைக்கப்பெறும் அனைத்து முறைப்பாடுகள் தகவல்கள் தொடர்பிலும் துரித கதியில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி பதவிப் பிரமாணம் செய்துகொண்டு ஓராண்டு பூர்த்தியாவதனை முன்னிட்டு இந்த விசேட திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -