ஹோமாகம நீதவான் நீதிமன்ற வளாகத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் விஷேட பொலிஸ் அதிரடிப் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
குழப்ப நிலை ஏற்படலாம் என யூகிக்கப்பட்டுள்ளமையால் பாதுகாப்பை பலப்படுத்த இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
நேற்று ஞானசார தேரரை சிறைச்சாலை அதிகாரிகள் கொண்டு சென்றபோது அவர்கள் மீது சில தாக்குதல்கள் இடம்பெற்றதுடன்,
அவரை கொண்டு சென்ற நீதிமன்ற கெப் வாகனத்துக்கும் சேதம் விளைவித்துள்ளனர். அந்த வாகனத்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்ததுடன், பின் பக்கத்துக்கும், இலக்க தகடுக்கும் சேதம் விளைவித்துள்ளனர்.
