வெலிமடையில் விபத்து ஒருவர் பலி..!

க.கிஷாந்தன்-
வெலிமடை, பொரலந்தை, என்ட்ருகொல்ல பிரதேசத்தில் 26.01.2016 அன்று இரவு 8 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 47 வயதான 3 பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்துள்ளார். 

மேற்படி நபர், பொரலந்தை தபால் நிலையத்தில் சேவையாற்றி வந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

என்ட்ருகொல்ல பகுதிக்கு மரக்கறி ஏற்றிச்செல்ல வந்த லொறியொன்று, வீதியில் சென்றுக்கொண்டிருந்த மேற்படி நபரின் மீது மோதியுள்ளது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக வெலிமடை வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பிரேத பரிசோதனைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவ் விபத்து தொடர்பில் வெலிமடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -