அரசியலை விட்டு ஒதுங்குகிறார் ஞான சார தேரர்..!

பொது பல சேனா அமைப்பின் பொது ஜன பெரமுன தேரர்களை தேர்தலில் களமிறக்குவதை முற்றாக நிறுத்தபோவதாக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சகோதர இணையத்தளத்துக்கு கருத்து வெளியிட்ட ஞான சார தேரர் இதனை உறுதிப்படுத்தினார்.

மேலும் இது தொடர்பாக கருத்து வெளியிட்ட அவ்வமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரி டிலனந்த விதானகே 

பொது பல சேனாவும் பொது ஜன பெரமுனவும் இரு வெவ்வேறு அமைப்புகள் மூன்று மாதங்களுக்கு முன்னர் தேரர்கள் தேர்தலில் போட்டியிடக் கூடாது என முன்னவைக்கப்பட்ட யோசனைக்கு அமைவாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர்.

மேலும் பொது ஜன பெரமுன அரசியல் கட்சி எக்சத் சிங்கள மஹஜன பெரமுன என பெயர் மாற்றம் பெறவுள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும் வரும் காலங்களில் ஞான சார தேரர் அரசியல் நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபடுவதை மட்டுப்படுத்துவார் எனவும் தேர்தலில் போட்டியிடமாட்டார் எனவும் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -