இந்தியா – மியான்மர் எல்லை அருகே வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியா-மியான்மர் எல்லைக்கருகே மணித்துறை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இன்று அதிகாலை 4.30 மணி அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 6.7ஆக பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கட்டிடங்கள் குழுங்கியதால் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு சாலைகளில் தஞ்சம் அடைந்ததாகவும், நிலநடுக்கம் சுமார் 1 நிமிடம் நீடித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது கிடைத்துள்ள தகவல்படி, நிலநடுக்கத்திற்கு 3 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அசாம், ஜார்கன், ஒடிசா, நாகாலாந்த், அருணாச்சல பிரதேசம், மேற்கு வங்கம் மற்றும் வங்க தேசத்திலும் நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டது.

