மாவனல்லை மன்சூர் மொழிபெயர்த்த கே. ஜயதிகவின் ‘பட்டி’ நூல் வெளியீட்டு விழா..!

சிங்கள தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கொடகே வெளியீடான மாவனல்லை எம்.எம். மன்சூர் தமிழில் மொழிபெயர்த்த சிங்கள எழுத்தாளர் கே. ஜயதிகவின் சிறுகதைகள் அடங்கிய ‘பட்டி’ நூல் வெளியீட்டு விழா> எதிர்வரும் 10.10.2016 அன்று காலை 10 மணிக்கு மேமன்கவி தலைமையில் கொழும்புத் தமிழ் சங்க விநோதன் மண்டபத்தில் நடைபெறும்.

இவ்விழாவில் நூலின் முதற் பிரதியினை புரவலர் ஹாசிம் ஒமர் அவர்கள் பெற்றுக் கொள்வதுடன், இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக கொடகே புத்தக நிறுவனத்தின் நிறுவனர் திரு. சிரிசுமன கொடகே அவர்களும், கே.ஜயதிலக அவர்களின்; பாரியார் திருமதி கே.ஜயதிலக அவர்களும் கலந்துக் கொள்வார்கள்.

வரவேற்புரையை மூத்த ஊடகவியலாளர் கே.பொன்னுத்துரை நிகழ்த்த> நூலசிரியர் அறிமுகவுரையை திக்குவல்லை கமால் நிகழ்ததுவார். கருத்துரைகளை சிங்கள மொழியில் எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான ஹேசந்திர பதிரண அவர்களும், தமிழில் திருமதி வசந்தி தயாபரன் அவர்களும் நிகழ்த்துவார்கள்.

ஏற்புரையை நூலாசிரியர் கலாபூசணம் மாவனல்லை மன்சூர் நிகழ்த்துவார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -