சவூதி நாட்டின் இளவரசர் அப்துல் அஸீஸ் அல் சவூத் இலங்கை வருகை..!

கொழும்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் அவர்களின் ஏற்பாட்டில் நாளை நடைபெற இருக்கும் கிழக்கின் முதலீட்டு அரங்கத்தில் பங்கேற்க சர்வதேச முதலீட்டாளர்கள் தொடர்ந்தும் தலைநகருக்கு வந்தவன்னம் உள்ளனர். 

இன்று பண்டார் நாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சவூதி நாட்டின் இளவரசர் எச்.ஆர்.எச்.பிரின்ஸ் அப்துல் அஸீஸ் அல் சவூத் அவர்களை முதலமைச்சர் வரவேற்றார்.

இவரது வருகை இந்த அரங்கின் வெற்றிக்கு மேலும் உத்வேகளிக்கும் என கிழக்கு முதலீட்டு அரங்கின் கருத்தாவாக விளங்கும் கிழக்கு மாகாண முதலமைச்சரான ஹாபிஸ் நசீர் அகமட் தெரிவித்தார். கடந்த ஒரு வார காலமாக பங்களாதேஸ், கட்டார், சவூதி, ஓமான், கனடா, இலண்டன், கேரளா, தமிழ் நாடு, மதுரை, சென்னை, பாகிஸ்தான் மற்றும் மாலை தீவு போன்ற ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் பல சர்வதேச முதலீட்டாளர்கள் இலங்கைக்கு வருகை தந்து கொண்டிருக்கின்றனர். 

சர்வதேச முதலீட்டுத் துறையில் ஆர்வம் கொண்டவர்களும் வசதி பணம் படைத்த முதலீட்டாளர்களும் இந்த நிகழ்வில் ஆர்வம் கொண்டுவருகின்றனர்.

சர்வதேச வர்த்தக அமைச்சு, இலங்கை முதலீட்டாளர்கள் சபை ஆகியன கிழக்கு மாகாண சபையின் இந்த முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்கி இருக்கின்றன. 

இன்றும் நாளைக் காலையும் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சர்வதேச முதலீட்டாளர்கள் வருகை தருவர் என நம்பப்படுகின்றது. கொழும்புக்கு வெளியே உள்ள உள்ளூர் முதலீட்டாளர்களும் கொழும்பிற்கு வந்து தங்கியுள்ளனர். 





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -