வில்பத்து அழியக்காரணம் கடந்த அரசாங்கமே – ஜனாதிபதி

வில்பத்து வனப்பகுதியில் இடம்பெறும் காடழிப்பு தொடர்பில் பல்வேறு தரப்பினரும் கவனம் செலுத்தியிருந்தனர்.

2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் ஆட்சியில் இருந்த அரசாங்கம் அமைச்சுக்களின் குழு எடுத்த தீர்மானத்திற்கு அமைவாக வனபாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமான 3500 ஏக்கருக்கும் அதிகமான வனப்பகுதி வட பகுதியில் விடுவிக்கப்பட்டது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த அரசாங்கம் மீள் குடியேற்ற நடவடிக்கைகளின் போது மேற்கொண்ட குறுகிய தீர்வுகளின் காரணமாகவே வில்பத்து வனம் அழிய காரணம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

நேற்று பத்தரமுல்லையில் இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர், இதனை தெரிவித்தார்.

இதன் போது 29 வீதமாக காணப்படும் நாட்டின் வனப்பகுதியை அடுத்த மூன்று வருடங்களில் 32 வீதமாக அதிகரிக்கவுள்ளதாக பத்தரமுல்லை, அபேகம வளாகத்தில் நடைபெற்ற வனப்பாதுகாப்பு உதவி அதிகாரிகளுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -