சம்மாந்துறை மத்திய கல்லூரி சாதனை :11 வைத்தியத்துறை, 3 பொறியியல்துறை,வர்த்தகத்துறை 6

அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியில் 11 மாணவர்கள் வைத்தியத்துறைக்குத் தெரிவாகி சாதனை படைத்துள்ளனர்.

றசீட்மொகமட் இன்சாட் 3ஏ பெற்று மாவட்டத்தில் 06ஆம் நிலையிலும், ஆதம்பாவா பாத்திமா சப்னாஸ் 3ஏ பெற்று மாவட்டத்தில் 07ஆம் நிலையிலும், தசீம் பாத்திமா சஸ்னா 3ஏ பெற்று 23ஆம் நிலையிலும் உள்ளனர்.


மொகமட் முஸ்தபா மொகமட் சஜாத் 2ஏ1பி பெற்று மாவட்டத்தில் 05ஆம் நிலையிலும், குசைன்மொகமட் இஃசான் 2ஏ1பி பெற்று மாவட்டத்தில் 11ஆம் நிலையிலும், நௌசாட் அசான் சுகைல்மொகமட் 2ஏ1பி பெற்று மாவட்டத்தில் 15ஆம் நிலையிலும், அப்துல்கரீம் பாத்திமா அஸ்ரா 2ஏ1பி பெற்று மாவட்டத்தில் 12ஆம் நிலையிலும், அக்பர் றிப்காபானு 2ஏ1பி பெற்று மாவட்டத்தில் 25ஆம் நிலையிலும், ஆதம்பாவா அப்துல்பாரி 2ஏ1பி பெற்று மாவட்டத்தில் 27ஆம் நிலையிலும், மொகமட் அசைனுல் பாத்திமா றொசான் ஏ2பி பெற்று மாவட்டத்தில் 29ஆம் நிலையிலும், மொகமட்தம்பி அன்பஸ்ஹாதிக் அஷ்ஜாத் 2ஏ1சி பெற்று மாவட்டத்தில் 32ஆம் நிலையிலும் உள்ளனர்.

இவர்கள் 11பேரும் வைத்தியத்துறைக்கு தெரிவாகியுள்ளனர். இவர்களில் றசீட்மொகமட் இன்சாட் ஆதம்பாவா பாத்திமா சப்னாஸ் மொகமட் முஸ்தபா மொகமட் சஜாத் ஆகிய மூவரும் மெரிட் அடிப்படையில் வைத்தியத்துறைக்குத் தெரிவாகியுள்ளனர்.

பொறியியல்துறையில் மூவர் தெரிவு
கணிதத்துறையில் மூன்று மாணவர்கள் தெரிவாகியுள்ளனர்.
கே.எம்.தஸ்லிம் 3பி பெறுபேற்றையும் ரி.எம்.அசீம் ஏபிசி பெறுபேற்றையும் ஜே.எம்.றாசா ஏபிசி பெறுபேற்றையும் பெற்று மாவட்டத்தில் முறையே 40ஆம் 27ஆம் 23ஆம் நிலையிலும் உள்ளனர்.

வர்த்தகத்துறையில் அறுவரும் கலைத்துறையில் 09பேரும் தெரிவாகியுள்ளனர்.

தொழினுட்பத்துறையில் எழுவர் தெரிவு
பொறியியல் தொழில்நுட்பத்துறையில் 5மாணவரும் உயிரியல்தொழில்நுட்பத்துறையில் 2மாணவரும் சித்திபெற்று பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகியுள்ளதாக அதிபர் மேலும் தெரிவித்தார்.

இதனை விட உயிரியல் விஞ்ஞானம் பௌதீக விஞ்ஞானம் போன்ற துறைகளுக்கும் பல மாணவர்கள் தெரிவாகியுள்ளனர்.அவர்களின் விபரம் நாளையளவில் தெரியவருமென அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -