தெமட்டகொடை, பேஸ்லைன் வீதி பகுதியில் இன்று (16) மாலை வேளையில் நடைபெற்ற விபத்துச் சம்பவமொன்றில் சிங்களத் தாய் ஒருவரும், அவருடைய பிள்ளையும் உயிரிழந்துள்ளது.
முஸ்லிம் வர்த்தகர் ஒருவருடைய வாகனமொன்று மோதியே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.
எனினும் விபத்தை ஏற்படுத்தி உயிரிழப்புக்கு காரணமானவர் பொலிஸ் நிலையத்தில் சரணடையாது, அவருவருக்கு பதிலாக மற்றுமொருவர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சிங்கள மக்கள், விபத்து இடம்பெற்ற பொலிஸ் நிலையத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டுள்ளதாகவும், அங்கு பதற்ற நிலைய ஏற்பட:டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.