ஜனாதிபதியின் இல்லத்தில் இரவு ஒன்பது மணியளவில் விசேட சந்திப்பு - உளவுத்துறை இரகசிய அறிக்கை

டந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இரவு ஒன்பது மணியளவில் தேசிய அரசாங்கத்தின் கட்சி தலைவர்கள் உட்பட பிரதிநிதிகளுக்கிடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு கூட்டு எதிர்க்கட்சி அபயாராமையிளிருந்து மேற்கொள்ளும் செயற்பாடுகள் தொடர்பாக புலனாய்வு பிரிவு அரசாங்கத்திடம் வழங்கிய இரகசிய உளவு அறிக்கை தொடர்பாக இந்த விசேட சந்திப்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதேவேளை, அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் அபயாராமையுடன் தொடர்புகளைப் பேணி அங்கு மேற்கொண்ட கலந்துரையாடலொன்று தொடர்பாகவும் புலனாய்வு சேவை வழங்கிய அறிக்கை தொடர்பாகவும் இங்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, நல்லாட்சியை நாட்டில் மேலும் உறுதிப்படுத்துவதற்கும், அதற்கு தடையாக உள்ளவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ளவும் இந்த விசேட சந்திப்பின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்திப்பில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் லக்ஸ்மன் கிரியல்ல, கபீர் ஹாசிம், தலதா அத்துகோரள ஆகியோரும் ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் ராஜித சேனாரத்ன, அர்ஜுன ரணதுங்க, முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக ரவுப் ஹகீம் மற்றும் மனோ கணேசன் உள்ளிட்டோர் பங்கு பற்றியமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -