கடை ஒன்றில் பொருட்களை கொள்ளையடிக்க முயன்ற சந்தேக நபர் கைது..!

க.கிஷாந்தன்-
காசல்ரீ லெதண்டி தோட்டத்தில் கடை ஒன்றில் பொருட்களை கொள்ளையடிக்க முயன்ற சந்தேக நபர் ஒருவரை அயலவர்கள் நையப்புடைத்து அட்டன் பொலிஸாரிடம் பிடித்து கொடுத்துள்ளனர்.

12.01.2016 அன்று அதிகாலை 3 மணியளவில் சந்தேக நபர் மேற்படி தோட்டத்தில் உள்ள கடை ஒன்றில் கொள்ளையடிக்க முயன்ற போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேற்படி சந்தேக நபர் கடையை உடைத்துக்கொண்டிருக்கும் வேளையில் சத்தம் கேட்டதையடுத்து அயலில் உள்ள நபர்கள் வீட்டிலிருந்து வெளியே வந்து பார்த்த வேளையில் கடையை உடைத்துக்கொண்டிருந்த நபரை கண்டு தந்திரமாக இவரை பிடித்து நையப்புடைத்த பின் பொலிஸாருக்கு தொலைபேசியின் மூலம் அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து ஸ்தலத்திற்கு விரைந்த அட்டன் பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை 12.01.2016 அன்று அட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக அட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -