வடிசாராயம் காய்ச்சி விற்பனை செய்த பெண்ணுக்கு அபராதம்..!

ட்டவிரோத வடிசாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்த 55 வயது பெண்ணுக்கு 30,000ரூபாய் அபராதம் விதித்து மூதூர் நீதிமன்ற நீதிவான் ஜ.றிஸ்வான் நேற்று (11) தீர்ப்பு வழங்கினார்.

மூதூர் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட மேம்காமம் பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் வடிசாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்த குறித்த பெண் தொடர்பில் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த மூதூர் பொலிஸார், அவரிடமிருந்து 5,000 மில்லி லீற்றர் வடிசாராயத்தை கைப்பற்றி அவரையும் கைது செய்தனர்.

குறித்த பெண்ணுக்கெதிராக இரண்டு வழக்குகள் தொடர்ந்தும் மூதூர் நீதிமன்றத்தில் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -